For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பத்மாவிடம் சிக்கியது எப்படி-பிரதீப் புலம்பல்!

  By Staff
  |

  பத்மாவின் அழகில் சொக்கிப் போய்க் கிடந்தேன், பணத்தையெல்லாம் வாரி வாரி இறைத்தேன். இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன். மானம் போய் விட்டது, மனைவியும் பிரிந்து போய் விட்டார் என்று பத்மாவால் வீழ்ந்த ஆந்திர தொழிலதிபர் பிரதீப் கொணேரு புலம்பியுள்ளார்.

  பத்மாவின் கதை படா கதையாக உள்ளது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பத்மா புராணம் நீண்டு கொண்டே போகிறது.

  இந்த நிலையில் பத்மாவால் தான் வீழ்ந்த கதையை படு சோகமாக விவரித்துள்ளார் தொழிலதிபர் பிரதீப் கொணேரு. போலீஸாரிடம் அவர் பத்மா குறித்தும், தான் பட்ட அவஸ்தைகள் குறித்தும் விலாவாரியாக கூறியுள்ளார் பிரதீப்.

  அவர் என்ன சொன்னார் என்பதை அவரது வாயாலேயே கேட்போம்:

  அது 2005ம் ஆண்டு. எனது நண்பர் நிர்மல்குமாரை தொடர்பு கொண்டு எனக்கு ஒரு நல்ல பெண் கம்பானியன் வேண்டும் என்று கேட்டேன். அவருக்கு நிறைய பெண் தொடர்பு உண்டு. எனவேதான் அவரிடம் கேட்டன்.

  அவரும் சரி என்று கூறினார். பின்னர் பிசினஸ் விஷயமாக நானும், நிர்மலும் பெங்களூர் சென்றிருந்தோம். அப்போதுதான் பத்மாவை எனக்கு அறிமுகப்படுத்தினார் நிர்மல்.

  பார்த்தவுடனேயே நான் சொக்கிப் போய் விட்டேன். அப்படி ஒரு அழகுடன் இருந்தார் பத்மா. இவர்தான் எனக்கேற்ற கம்பானியன் என்று முடிவு செய்தேன். சூட்டோடு சூடாக 3 நாள் ஹோட்டலில் ரூம் போட்டேன்.

  அந்த மூன்று நாட்களும் என்னை பத்மா சந்தோஷப்படுத்தினார். எனது மனம் கோணாத அளவுக்கு குஷிப்படுத்தினார். உல்லாசமாக இருந்தேன். இதற்காக தினசரி ரூ. 75 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ. 2 லட்சத்தைத் தூக்கிக் கொடுத்தேன். அது மட்டுமல்லாமல், ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள ஒரு செல்போனையும் பத்மாவுக்கு வாங்கிக் கொடுத்தேன்.

  பெங்களூரில் பத்மா கொடுத்த சந்தோஷத்தை என்னால் மறக்க முடியவில்லை. எனக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் பத்மாவை அழைப்பேன். பத்மாவும் என்னை திருப்திப்படுத்துவார்.

  எனது சோகங்கள், வேதனைகளுக்கு வடிகாலாக இருந்தால் பத்மா. மற்றபடி எனக்கு அவர் மீது காதல் கிடையாது. அப்படி அவர் சொல்வதிலும் உண்மை இல்லை.

  சில சமயம் பத்மாவால் வர முடியாத நிலை ஏற்படும். வேறு யாருடனாவது லாக் ஆகி இருப்பார். அந்த சமயங்களில் வர முடியாது என்று கூறி விடுவார்.

  பத்மாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. பெரும்பாலும் தனியாக குடிக்க மாட்டோம். பாய் பிரண்டுகளோடு சேர்ந்துதான் கும்மாளமாக குடிப்பார்.

  என்னுடன் இருக்கும்போதும் அவர் குடிப்பார். அப்போதெல்லாம் ஒவ்வொரு பெக்குக்கும் ஒரு டிரஸ்ஸை கழற்றுவார். அப்போது அவரது அழகைப் பார்த்து சொக்கிப் போய் விட்டேன், மயங்கிக் கிடப்பேன்.

  இப்படித்தான் ஒருமுறை போதையின் மடியில் நான் அவரது மடியில் இருந்தபோது, என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள், நீங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்றார்.

  அந்தப் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை. முடியாது என்று கூறினேன். அதன் பின்னர் அவரது நடவடிக்கையே முற்றிலும் மாறிப் போனது. அடிக்கடி கல்யாணம் செய்து கொள்ளுமாறு கூறி தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். இதனால் நான் பத்மாவை விட்டு விலக ஆரம்பித்தேன்.

  கிட்டத்த ஒன்றரை மாதமாக எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நிலையில்தான் நிர்மல், பத்மாவை அழைக்கலாம் என்றார். நான் வேண்டாம் என்று சொல்லியும் அழைத்து விட்டார்.

  இதுதான் வினையாகி விட்டது. விருந்துக்காக வந்த பத்மா, எங்களை வீடியோவில் படமெடுத்து விட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பத்மாவும், அவரது கும்பலும் திட்டமிட்டுத்தான் இதைச் செய்தார்கள் என்பது பின்னர்தான் புரிந்தது.

  பட்டது போதுமடா என்றுதான் போலீஸுக்குச் சென்றேன். விஷயம் ரகசியமாக முடிந்து விடும் என்று நம்பினேன். ஆனால் எல்லாம் வெளியாகி எனது மானமே போய் விட்டது. இதற்கு பேசாமல் பத்மா கேட்ட 10 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கலாம்.

  நாடு முழுவதும் எனது பெயர் நாறி விட்டது. எனது மனைவியும் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்று விட்டார். எனது நிலைமை ரொம்பவும் மோசமாகி விட்டது என்று புலம்பியுள்ளார் பிரதீப்.

  பிரதீப் தொட்டார், படாதபாடு படுகிறார். ஆனால் பத்மாவுடன் சேர்த்துக் கைதாகியுள்ள அமீர்ஜான் நிலைதான் ரொம்ப சோகம்.

  பத்மாவுடன் சேர்த்து கைதாகியுள்ள சந்திரனின் நண்பர்தான் இந்த அமீர்ஜான். இவர் துறைமுகம் பகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளராம். ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை ஏற்றி வைத்திருப்பார் அமீர்ஜான். இதனால் அவரைத் தேடி சினிமா ஸ்டண்ட் வாய்ப்பு வந்தது.

  இதையடுத்து ஸ்டண்ட் நடிகராக மாறினார் அமீர்ஜான். சிவாஜி படத்தில் கூட நடித்துள்ளாராம். ஸ்டண்ட் நடிகராக நடித்துக் கொண்டிருந்த அமீர்ஜானுக்குப் பழக்கமானவர் சஞ்சய். இவரும் ஒரு துணை நடிகர்தான்.

  அமீர்ஜானுக்கு பத்மாவுடன் நேரடித் தொடர்பு இல்லையாம். ஆனால் சஞ்சய் வந்து நடிகை பத்மாவுக்கு கார் வாங்கப் போகிறோம். பாதுகாப்புக்கு வர முடியுமா என்று கேட்டுள்ளார். இதற்காக ரூ.5000 சம்பளமும் பேசியுள்ளனர்.

  பின்னர் பத்மாவை நேரில் சந்தித்தார் அமீர்ஜான். அவரது அழகைப் பார்த்து அசந்து போய் விட்டாராம். பின்னர் பத்மாவுடன், அமீர்ஜான், சஞ்சய், சந்திரன் ஆகியோர் கிளம்பியுள்ளனர். ஆனால் கார் வாங்க போகாமல் நகைக் கடைக்குப் போயுள்ளனர்.

  கார் வாங்க போவதாக சொன்னார்களே என்று அமீர்ஜான் குழம்பியுள்ளார். பின்னர் பத்மா, சஞ்சய், பிரதீப் கடைக்குள் செல்ல அமீர்ஜானும், சந்திரனும் வெளியில் காத்திருந்தனர். அப்போதுதான் போலீஸார் வந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

  சும்மா வந்த தன்னை போலீஸார் கைது செய்தபோது குழம்பி விட்டாராம் அமீர்ஜான். போலீஸார் விவரத்தைச் சொல்லியபோதுதான் தெரியாத்தனமாக இப்படி சிக்கிக் கொண்டோமே என்று அதிர்ந்து போனாராம் அவர்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X