»   »  பத்மா நண்பர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா?

பத்மா நண்பர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை பத்மா நாராயனுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய், சந்திரன், அமீர்ஜான் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

ஆந்திராவைச் சேர்ந்தவரும், சென்னையில் வசித்து வருபவருமான தொழிலதிபர் பிரதீப் கொணேருவுடன் ஆபாச கோலத்தில் இருக்கும் காட்சிகளை வீடியோவில் படம் பிடித்து அவரிடம் காட்டி ரூ. 10 கோடி கேட்டு பிளாக்மெயில் செய்ததாக நடிகை பத்மா மற்றும் அவரது கூட்டாளிகளை போலிஸார் சமீபத்தில் கைது செய்தனர்.

பத்மா குறித்து பல்வேறு பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் பத்மாவின் கூட்டாளிகள் 3 பேர் சார்பிலும் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது 3 பேருக்கும் ஜாமீன் கிடைக்குமா என்பது தெரிய வரும்.

ஏற்கனவே பத்மா சார்பில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

சஞ்சய்தான், பத்மா நாராயணன் தொழிலதிபர்கள், முக்கியப் புள்ளிகளின் வாரிசுகள் உள்ளிட்டோருடன் பத்மா குஜாலாக இருக்கும் காட்சிகளை சுடச் சுட வீடியோவில் பதிவு செய்தவர் ஆவார்.

மற்ற இருவருக்கும் பத்மாவின் லீலைகளில் நேரடித் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. எனவே இவர்கள் இருவருக்கும் நாளை ஜாமீன் கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil