»   »  பத்மா காவல் நீட்டிப்பு

பத்மா காவல் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

நடிகை பத்மா நாராயணன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சிறைக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர தொழிலதிபர் பிரதீப் கொணேருவுடன் ஆபாச கோலத்தில் இருப்பதை வீடியோவில் படமாக்கி ரூ. 10 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார் நடிகை பத்மா.

அவருக்கு உடந்தையாக இருந்ததாக துணை நடிகர் சஞ்சய், சந்திரன், சினிமா ஸ்டண்ட் நடிகர் அமீர்ஜான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நான்கு பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் காவல் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கைதிகளிடம் குறை கேட்பதற்காக நேற்று புழல் மத்திய சிறைக்கு வந்தார்.

அப்போது பத்மா உள்ளிட்டோர் அவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி குறை கேட்டார். பின்னர் அவர்களின் காவலை வருகிற 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil