»   »  பத்மா பிரண்டுக்கு ஜாமீன் இல்லை

பத்மா பிரண்டுக்கு ஜாமீன் இல்லை

Subscribe to Oneindia Tamil

தொழிலதிபருடன் ஏடாகூடமான கோலத்தில் இருந்ததை வீடியோவில் பதிவு செய்து ரூ. 10 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் நடிகை பத்மாவுடன் சேர்ந்து கைதான அவரது தோழர் சஞ்சய்யின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகை பத்மாவும், அவரது தோழர்கள் சஞ்சய் உள்ளிட்டோர் இணைந்து, ஆந்திராவைச் சேர்ந்தவரும், சென்னையில் வசித்து வருபவருமான தொழிலதிபர் பிரதீப் கொணேருவுடன், பத்மா ஆபாச கோலத்தில் இருப்பதை வீடியோவில் பதிவு செய்து அதை வைத்து பிரதீப்பை மிரட்டி ரூ. 10 கோடி கேட்டு மிரட்டியதாக பிரதீப் போலீஸில் புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரின் பேரில் பத்மா உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பத்மா குறித்த பல திடுக்கிடும் கிளுகிளு கதைகள் வெளி வந்தன.

அனைவரும் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி முன்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

அதன் பின்னர் பத்மாவின் சார்பில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறிது காலம் பத்மா சிறைக்குள்ளேயேய இருக்கட்டும். அப்போதுதான் அவர் திருந்துவார் என்று அவரது குடும்பத்தினர் விட்டு விட்டனர்.

இதனால் தொடர்ந்து பத்மா சிறையிலேயே உள்ளார். கவர்ச்சி கதகளி ஆடி வந்த அவர் இப்போது சிறைக்குள் பழுத்த ஞானப் பழமாக மாறியுள்ளார். கடவுள் பக்தி முற்றி விட்டது. கிட்டத்தட்ட துறவி நிலையில் அவர் உள்ளாராம்.

இந்த நிலையில் பத்மாவின் தோழர் சஞ்சய் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அதை நீதிபதி ஜெயபால் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் சஞ்சய்க்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சஞ்சயின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார்.

Please Wait while comments are loading...