»   »  'மிருகம்' - குஷியில் பத்மப்ரியா!

'மிருகம்' - குஷியில் பத்மப்ரியா!

Subscribe to Oneindia Tamil
Padmapriya
மிருகம் படம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து எனது திரையுலக வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த படம் இதுதான் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார் பத்மப்ரியா.

மிருகம் படத்தின் நாயகியான பத்மப்ரியா, அப்படத்தின் ஷூட்டிங்கின்போது பல சர்ச்சைகளைக் கிளப்பினார். இறுதியில், படப்பிடிப்பு முடியும் நிலையில் சரிவர நடிக்கவில்லை என்று கூறி இயக்குநர் சாமியால் கன்னத்தில் அறையப்பட்டார்.

இந்த விவகாரம் காரணமாக இயக்குநர் சாமிக்கு ஒரு ஆண்டு தடையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ளது. ஆனால் இதுகுறித்துக் கவலைபப்டவில்லை சாமி. திட்டமிட்டபடி படத்தை முடித்து திரைக்கும் கொண்டு வந்து விட்டார்.

படம் இப்போது வெற்றி பெற்றுள்ளது. பெண்கள் கூட்டம் குறைவாக இருப்பது மட்டும்தான் மிருகம் படத்தின் ஒரே குறை. ஆனால் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கருத்தை சாமி ஆணித்தரமாக சொல்லியிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

இந்த நிலையில் மிருகம் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார் சர்ச்சை நாயகி பத்மப்ரியா. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தப் படத்திற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் இயற்கையான மேக்கப்பில் நடித்தேன்.

இந்தக் கேரக்டருக்காக நான் எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன் என்பதை படத்தைப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்போது படம் நன்றாக வந்துள்ளது, நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு பலரும் என்னை நடிக்க கூப்பிடுகிறார்கள், பாராட்டுகிறார்கள் என்றார் பத்மப்ரியா.


பத்மப்பிரியா நடிக்க வந்த முதல் படமான தவமாய் தவமிருந்துக்குப் பின்னர் சூப்பர் ஹிட் ஆகியுள்ள அவரது 2வது படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மிருகம் குறித்து சந்தோஷமாக கூறும் பத்மப்ரியா இயக்குநர் சாமி குறித்து மறந்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

தற்போது பத்மப்ரியா, அர்ஜூனுடன் துரை படத்தில் நடிக்கிறார். அதுகுறித்துத அவர் கூறுகையில், துரை போன்ற கமர்ஷியல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. மேலும் இதில் எனக்கு கலர்புல்லான கேரக்டரும் கூட.

எப்போதுமே நான் கிளாமர் ரோல்களில் நடிக்க மறுத்ததில்லை. துரை படத்தில் நான் டோட்டலாக மாறியிருப்பேன் என்றார் சந்தோஷத்தோடு.

இதுதவிர ஸ்டிரைக்கர் என்ற இந்திப் படத்திலும் நடிக்கிறாராம் பத்மப்ரியா. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது சித்தார்த். இது ஒரு செஸ் வீரர் குறித்த கதையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil