»   »  கடைசி உண்மைத் தயாரிப்பாளரும் நம்மை விட்டு மறைந்தார்!

கடைசி உண்மைத் தயாரிப்பாளரும் நம்மை விட்டு மறைந்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் படத் தயாரிப்பாளர்கள் என்று எவருமே இல்லை. இத்தனை கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்றேன். அதுக்கு மாசம் இவ்வளவு வட்டி... எல்லாம் சேர்த்து இவ்வளவு ரிட்டர்ன்ஸ் வரணும். கிடைக்குமா? என்று கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் கண்டிஷன் போடும் ஃபைனான்ஸியர்கள்தான் இருக்கிறார்கள்.

Panchu sir is the last honest producer of this industry

உண்மையான தயாரிப்பாளர் என்றால் ஒரு கதையைக் கேட்டு அதை எப்படி எப்படியெல்லாம் செழுமைப்படுத்தலாம் என்று திட்டமிட்டு அதற்கு தேவையான கலைஞர்களையும், டெக்னிஷியன்களையும் சேர்த்து ஒரு கதையை படமாக உருவாக்கி ரசிகனிடத்தில் தருபவர் தான் படத்தின் தயாரிப்பாளர்.

முந்தைய தலைமுறை வரை அப்படிப்பட்ட சினிமாவை உண்மையாக நேசிக்கும் தயாரிப்பாளர்கள் தான் இருந்தார்கள். அவர்களின் கடைசி எச்சமாகவும் அனுபவத்தின் உச்சமாகவும் விளங்கிய பஞ்சு அருணாசலம் இன்று காலமாகி விட்டார்.

விகடனில் அவர் எழுதிக்கொண்டிருந்த 'திரைத்தொண்டர்' தொடர் வரை அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய, அறிமுகப்படுத்திய கலைஞர்களும், சினிமாவை நேசிப்பவர்களுக்கும், சினிமாவுக்குள் நுழைய துடிப்பவர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுப்பவை.

தமிழ் சினிமாவின் கடைசித் திரைப்படம் இருக்கும் வரை பஞ்சு அருணாசலத்தின் புகழ் இருக்கும். சினிமாவுலகின் அரை நூற்றாண்டுக்கு மேலான சரித்திரம் இன்று அமரத்துவம் எய்தி இருக்கிறது!

English summary
Late legend Panchu Arunachalam was the last honest producer and film maker of this industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil