»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குடைக்குள் மழை பெய்தால்?, குடை ஓட்டையாகிவிட்டது என்றே அர்த்தம்.

எந்த நேரத்தில் இந்தப் பெயரை வைத்து பார்த்திபன் படம் எடுத்தாரே, குடைக்குள் மழை படம் அவரதுபாக்கெட்டை ஓட்டை போட்டு சல்லடையாக்கியிருக்கிறது.

இந்தப் படத்தை மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கித் தான் எடுத்தார் பார்த்திபன். அதை வெளிப்படையாகவேசொல்லியபடி தான் சூட்டிங்கில் இறங்கினார்.

படம் வெளியானதிலிருந்து பார்த்திபன் பாராட்டு மழையில் நனைந்தபடி இருக்கிறார்ர். பத்திரிகைகள், சினிமாவிமர்சகர்கள் அவரை பாராட்டித் தள்ள, தொலைக் காட்சிகளில் டாப் டென்னில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

இதில் பார்த்திபனின் மனசு நிறைந்திருக்கிறது. ஆனால் கல்லா நிறையவில்லை.

இதை பார்த்திபன் வழக்கமான தைரியத்துடன் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார்.

ஏ சென்டரில் கிடைத்த வசூல், பி மற்றும் சி சென்டரில் இல்லை. அங்கு படம் சரியாக ஓடவில்லை,வியாபாரரீதியாக எனக்கு இந்தப் படம் தந்திருப்பது நஷ்டம் தான். இதை எங்க போயி சொல்லுவேன்..என்னான்னு சொல்லுவேன் என்கிறார்.

ஏ சென்டர் ஆடியன்சுக்கே படத்தைப் புரிந்து கொள்ள கொஞ்சம் மனோதத்துவ ஓரியன்டேசன் தேவைப்பட்டது.பி மற்றும் சி சென்டரில் கேட்கவே வேண்டாம். குறிப்பாக சி சென்டர்களில், என்னாச்சு பார்த்திபனுக்கு என்றுகுழம்பியபடி தியேட்டரில் இருந்து எழுந்து ஓடுகிறார்களாம்.

இந்தப் படத்தின் மூலம் பார்த்திபன் படித்துக் கொண்ட பாடம்:

பியூட்டிபுல் மைன்ட் போன்ற படங்களை பார்கலாம், அதில் தப்பில்லை. ஆனால், அதே மாதிரி தமிழில்படமெடுக்கக் கூடாது என்பது தான்.

சொந்தப் படங்கள் எடுத்து பார்த்திபன் அவ்வப்போது கையைச் சுட்டுக் கொண்டாலும், அவரது மனித நேயம்மட்டும் மாறவே இல்லை. முதலில் இரண்டு ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தவர், தற்போது கோவையைச்சேர்ந்த ஐஸ்வர்ய லஷ்மி (8), அவரது சகோதரி அஞ்சனா தேவி (7) என்ற இரு சிறுமிகளின் பள்ளிப் படிப்புச்செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளாராம்.

பார்த்திபன் விஷயம் இப்படி இருக்க, குடைக்குள் மழையில் நடித்த பெங்களூர் பெண் மதுமிதாவின் நடிப்பு மற்றும்துணிச்சலால் (பார்த்திக்கு அவர் கொடுத்த லிப்-டு-லிப்- கிஸ்கள்) ரொம்பவே ஈர்க்கப்பட்டுவிட்ட கோடம்பாக்கம்தயாரிப்பு பார்ட்டிகள் அவரது வீட்டைத் தட்ட ஆரம்பித்துவிட்டனர்.

படத்தில் புக் செய்யத்தாங்க...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil