»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படையப்பா படத்தின் வசூலை சாமி மிஞ்சி விடும் என்று பேச்சு எழுந்துள்ள நிலையில், சாமியையும்விஞ்சிவிடும் வகையில் பார்த்திபன் கனவு படம் ஓடத் தொடங்கியுள்ளது.

விக்ரம் நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சாமி, வசூலில் சாதனை படைத்துக் கொண்டுள்ளதாம்.ரஜினிக்கு பெரும் வசூலை அள்ளிக் கொடுத்த படையப்பாவின் வசூலையே சில வாரங்களில் சாமி தூக்கிசாப்பிட்டுவிடும் என்கிறார்கள்.

இப்போது இந்தப் படத்துக்கு இண்ணையாக ஸ்ரீகாந்த், ஸ்நேகா ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள பார்த்திபன்கனவும் ஓடத் தொடங்கியுள்ளதாக வினியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் மிகச்சுமாராகவே ஓடத் தொடங்கிய இந்தப் படம் இப்போது ஹிட் ஆகி விட்டதாம்.

படம் மிக நன்றாக இருப்பதாக பேச்சு எழுந்துள்ளதோடு தியேட்டர்களில் கூட்டமும் அலைமோதுகிறது.

படத்தின் வெற்றிக்கு கதை, பாடல்கள், ஸ்நேகாவைக் காரணமாகச் சொல்கிறார்கள். ஸ்னேகா ராசியில்லாதவர்என்ற பெயர் வாங்கி சோகத்தில் இருந்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியால் பூரித்துப் போய்இருக்கிறாராம்.

இந்தப் படத்துக்குச் செலவும் குறைவு. ஸ்நேகாவுக்குத் தான் ரூ. 25 லட்சம் வரை தரப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த்துக்குஅடிமாட்டு சம்பளம் தானாம். இதனால் இந்தப் படம் மூலம் பெரும் பணம் ஈட்டப் போகிறார் தயாரிப்பாளர்என்கிறார்கள்.

எப்படியோ குறைந்த பட்ஜெட்டில் வரும் நல்ல படங்கள் ஜெயித்து பணப் பேய் நடிகர்களை ஓரம் கட்டினால்நல்லது தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil