»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பார்த்திபனுக்கு இது கெட்ட நேரம் போல. அவரை வைத்துப் பூஜை போடப்பட்ட இரண்டு படங்கள் "டிராப்செய்யப்பட்டு விட்டனவாம்.

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இரண்டு பட பூஜை விழாக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.பார்த்திபனை ஹீரோவாக வைத்து தொடங்கப்பட்ட "அட, "ரெளடி ஆகிய படங்கள்தான் அவை.

பட பூஜையின்போது, சிறுவர்கள் கையில் அரிவாள், கத்தி, சைக்கிள் செயின் ஆகியவற்றைக் கொடுத்து நிறுத்திவைத்திருந்தார்கள். பூஜைக்கு வந்தவர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து அலறிப் போயினர்.

சின்னப் பசங்க கையில் இப்படியா கொடுத்து நிறுத்தி வைப்பது என்று அவர்கள் பார்த்திபனிடம் புலம்ப, அவரும்அதிர்ச்சியை வெளியிட்டார்.

அப்படி பரபரப்புடன் தொடங்கப்பட்ட ரெளடியும், அட என்ற படமும் இப்போது கைவிடப்பட்டுவிட்டனவாம்.

பைனான்ஸ் பிரச்சினைதான் காரணம் என்று கோலிவுட்டில் கூறினாலும், இயக்குனர்களுக்கும் பார்த்திபனுக்கும்இடையே ஒத்துவரவில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.

மேலும், இரண்டு படங்களின் கதைகளிலும்ல் சில மாற்றங்களை பார்த்திபன் சொல்ல அதை இயக்குனர்கள் ஏற்கமறுத்து விட்டாராம். இதனால் கோபமடைந்த பார்த்திபன், இரண்டு படங்களிலிருந்தும் விலகிக் கொண்டு விட்டார்என்கிறார்கள்.

இதேபோல, பார்த்திபனின் சொந்த இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகவிருந்த "பச்சைக் குதிரை படமும்பாதியில் நிற்கிறது. இதற்கும் பணப் பிரச்சினைதான் காரணம் என்கிறார்கள்.

இப்போதைக்கு அந்தப் படத்தை ஆரம்பிக்க முடியாத நிலை உள்ளதால் "பச்சைக் குதிரைக்கு ஹால்ட்கொடுத்துள்ளார் பார்த்திபன் என்கிறார்கள்.

இந்த சிக்கல்கள் ஒருபுறமிருக்க, பார்த்திபனின் இன்னொரு படத்தால் அஜித் கடுப்பில் இருக்கிறாராம்.

இளைய தளபதியால் தானே பிரச்சினை. பார்த்திபனின் கூடவுமா ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மேட்டருக்குவருவோம். வடிவேலுவுடன் இவர் நடிக்கும் ஒரு படத்திற்கு "தல தறுதல என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

பெயரைக் கேட்டவுடன் உங்களுக்குப் புரிந்திருக்குமே. பிறகென்ன நம்ம அல்டிமேட் ஸ்டாருக்கு மட்டும் புரியாதாஎன்ன ? படத்தின் பெயரைக் கேட்டு தல அஜித் தரப்பு கொதித்துப் போய் உள்ளது.

"படத்தின் பெயரை மாத்தலே.. அப்புறம் என் ரசிகர்கள் பாத்துக்குவாங்க.. என்று பாமக ராமதாஸ் ரேஞ்சுக்குவெளிப்படையாகவே எச்சரித்துள்ளாராம் "தல சாரி.. அஜித்.

கெட்டதிலும் நல்லது நடக்கும் என்பது போல, இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் பார்த்திபன் சற்றேதெம்பாகவும், சந்தோஷமாகவும் காணப்படுகிறார்.

அவர் நடித்து வெளியாகியுள்ள கண்ணாடிப் பூக்கள் படம் போட்ட காசுக்கு வஞ்சனை செய்யாமல் வசூல் செய்துவருவதாலும், அதில் பார்த்திபனின் நடிப்பு மிக நன்றாக பேசப்படுவது ஒரு காரணம்.

இன்னொரு காரணம், அவர் நடிக்கும் இன்னொரு படமான "கர்த்தா மிக பிரமாண்டமாக தயாராவது.

சத்யராஜ் நடித்த "அடிதடி "மகா நடிகன் ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த எம். ஞானசுந்தரியின் சுந்தரிபிலிம்ஸ் நிறுவனம் கர்த்தாவைத் தயாரிக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஜே.வி.ஆர். சுப்பிரமணியன். இவர் பவித்ரன், கோட்டிராமகிருஷ்ணா ஆகியோரிடம் இவர் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இது தவிர அஜித் நடித்தசிட்டிசனிலும் இணை இயக்குனராக இருந்துள்ளார்.

""பிறப்புக்கு ஒரு ஆணும் பெண்ணும் போதும். இறப்பதற்கு ஒரு நொடி போதும். நடுவில் வாழும் வாழ்க்கைக்கு ஒருஆபத்பாந்தவன் தேவை இது தான் கர்த்தாவின் அவுட் லைனாம்.

இந்தப் படத்தில் பார்த்திபனுக்கு 2 ஜோடிகளாம். பெரும்பாலும் நமீதா நடிக்கலாம் என்று தெரிகிறது. இவரைத் தவிரஇன்னொரு ரோலுக்கு ஒரு நல்ல மும்பை இளம் பிஞ்சை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பார்த்திபன் குஷியோடுதிரிய மூன்றாவது முக்கிய காரணங்கள் இவை.

நாலாவது காரணம், இவரது குடைக்குள் மழை படம் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடக்கும் சினிக்வொஸ்ட் பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம். உள் நாட்டில் குடை கிழிந்தாலும் வெளிநாட்டில்சின்ன அங்கீகாரம் கிடைத்ததால் பார்த்தியின் வாய்க்கு வெளியிலும் பல்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil