»   »  தெலுங்கில் பருத்தி வீரன்

தெலுங்கில் பருத்தி வீரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் சூப்பர் ஹிட் படமான பருத்தி வீரன் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தியை ஹீரோவாகப் போட்டு, பிரியா மணியை அவருக்கு ஜோடியாக்கி அமீர் இயக்கிய பருத்தி வீரன் மாபெரும் ஹிட் படமானது.

இதையடுத்து அமீரின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து நிற்கிறது. அமீரின் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனராம், சிலர் அமீரை அணுகியும் உள்ளனராம்.

இந்த நிலையில் பருத்தி வீரன் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. சிவம் என்ற தமிழ்ப் படத்த இயக்கி வரும் புதுமுக இயக்குநர் சமுத்ரா தெலுங்கு பருத்தி வீரனை இயக்கவுள்ளார். படத்தை தெலுங்கில் இயக்கும் உரிமையை அவர் வாங்கியுள்ளார்.

கதையில் சில மாற்றங்களைச் செய்து பருத்தி வீரனை தெலுங்குக்குக் கொண்டு போகிறார் சமுத்ரா.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

பருத்தி வீரன் தமிழில் மெகா ஹிட் ஆனதை நான் அறிந்தவுடன் படத்தைப் பார்த்தேன். கதை என்னை கவர்ந்து விட்டது. படமாக்கிய விதம் எனது இதயத்தை உருக்கி விட்டது.

இந்தப் படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்ய வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டேன். பருத்தி வீரனில் தேனித் தமிழ் பயன்படுத்தப்பட்டிருந்தது. தெலுங்கில் கோதாவரி மாவட்டத்தில் பேசும் டயலக்ட் பயன்படுத்தப்படும்.

படத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். நானே ஹீரோவாக நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றார் சமுத்ரா.

தெலுங்கையும் கலக்கட்டும் பருத்தி வீரன்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil