»   »  தேசபக்தி ஊட்டிய தமிழ் நடிகர்கள்!

தேசபக்தி ஊட்டிய தமிழ் நடிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுதந்திரப் போராட்டத்துக்கும், கலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சுதந்திர வேட்கையை மக்களிடம் ஊட்டுவதில் நாடகங்கள் பெரும்பங்கு ஆற்றின. பிறகு இந்த முயற்சியை சினிமாக்கள் மேற்கொண்டன.

தமிழின் தேசபக்திப் படங்கள் :

தமிழின் தேசபக்திப் படங்கள் :

இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மூன்றாவது படமான ‘தியாகபூமி' (1939) விடுதலைக்கான காந்தியின் அழைப்பாக வெளிவந்தது. இந்தப் படத்தில் கோயில் பூசாரி சாம்புவாக பாபநாசம் சிவன் நடித்திருப்பார். இந்தப் பாத்திரத்தின் செயல்பாடுகள் காந்தியை நினைவுபடுத்தக்கூடியவை. அவரது மகள் சாவித்திரியாக எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்திருப்பார். இந்தப் பட்த்தை ஆன்ந்த விகடன் எஸ்.எஸ்.வாசன் விநியோகித்தார்.

சிவாஜி கணேசனின் தேசபக்திப் படங்கள் :

சிவாஜி கணேசனின் தேசபக்திப் படங்கள் :

சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழர்களிடையே தேசபக்தியை வளர்த்த்தில் பெரும் பங்கு நடிகர் திலகத்தினுடையது. அவர் நடித்த பெரும்பாலான படங்கள் சுதந்திரப் போராட்ட வீர்ர்களைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தின.

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)

வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிரான முதல் கலகக்குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டமொம்மனின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கட்டபொம்மனாக வாழ்ந்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சொல்லப் போனால் கட்டபொம்மன் எப்படி இருந்திதிருப்பார் என்றே தெரியாத இந்த தேசத்துக்கு, அந்த வரலாற்றுப் பாத்திரத்தை தன் முகம் மூலம் பதிய வைத்தவர் சிவாஜி கணேசன்.

தமிழர் நெஞ்சங்களை விட்டு நீங்காத இந்தப் படம், இன்றைக்குப் பார்த்தாலும் உணர்ச்சி ததும்ப வைக்கும். இந்த காவியத்தைப் படைத்தவர் பி.ஆர்.பந்துலு. இந்தப் படத்தின் சிறப்பு அதில் இடம்பெற்ற அற்புதமான வசனங்கள்.

கப்பலோட்டிய தமிழன் (1961)

கப்பலோட்டிய தமிழன் (1961)

பி.ஆர்.பந்துலு - சிவாஜி கணேசன் கூட்டணியில் வந்த இன்னுமொரு காவியம் கப்பலோட்டிய தமிழன். தென் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.

ஒரு நிஜ ஹீரோவின் உணர்ச்சிமயமான வாழ்க்கையை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார் நடிகர் திலகம். இந்திய சினிமாவின் ஒப்பற்ற படங்களின் வரிசையில் இடம்பெறத் தேவையான அனைத்து தகுதிகளும் நிறைந்த இந்தப் படத்தில், மகாகவி பாரதியின் பாடல்களை அத்தனை அழகாக இடம்பெறச் செய்திருந்தார் இயக்குநர் பந்துலு.

மாறிய தேசபக்திப் படங்களின் வடிவம் :

மாறிய தேசபக்திப் படங்களின் வடிவம் :

அதற்குப் பிந்தைய காலகட்ட்ங்களில், விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார் ஆகியோர் தேசபக்தி ஊட்டும் படங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து வந்தனர். இவர்கள், இந்திய ராணுவத்தின் பெருமைகளைச் சொல்கிற மாதிரியான படங்களில் நடித்தார்கள். ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிய காலம் போய், தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் படங்கள் வெளிவந்த காலம் அது.

ஜெய்ஹிந்த் (1994)

ஜெய்ஹிந்த் (1994)

இன்றும் சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இந்தப் படம் வெளிவந்த காலத்தில் தேசபக்தியை உரக்கச் சொல்லியது. இந்தப் பட்த்தில் இடம்பெறும் எஸ்.பி.பி பாடிய ‘தாயின் மணிக்கொடி...' பாடல் தேசபக்தி ஊட்டியது. அதுதவிர வரலாறு நினைவுகூரும்(!) பல பாடல்களும் இந்தப் பட்த்தில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். இந்தப் பட்த்தின் இரண்டாம் பாகம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த்து.

வந்தே மாதரம் (2010)

வந்தே மாதரம் (2010)

அர்ஜூன் நடித்த ‘வந்தே மாதரம்' தேசபக்தியை ஊட்டிய படம்தான். அர்ஜூன், ம்ம்முட்டி, ஸ்நேகா ஆகியோர் நடித்த இந்தப் படம் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றியும், தீவிரவாதிகளின் சதிமுயற்சிகளில் இருந்து போலீஸ் அதிகாரி அர்ஜூன் நாட்டைக் காப்பது பற்றியும் எடுக்கப்பட்ட்து.

வல்லரசு (2000)

வல்லரசு (2000)

வல்லரசு, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட தேசபக்தி ஊட்டும் படங்கள் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகின. விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழித்து இந்திய நாட்டை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே அப்படங்களின் கதையாக இருந்தன. விஜயகாந்த், மக்கள் பிரச்னைகளைப் பற்றியும், ஊழல் அரசியலைப் பற்றியும் பேசும் படங்களிலும் நடித்தார் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

ஐ லவ் இந்தியா (1993)

ஐ லவ் இந்தியா (1993)

சரத்குமார் நடிப்பில் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ‘ஐ லவ் இந்தியா'. இந்திய பிரிகேடியரான சரத்துக்கு காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணி வழங்கப்படும். அதில் அவர் வெற்றிபெற்றாரா என்பதுதான் இந்தப் பட்த்தின் கதை.

இந்தியன் (1996)

இந்தியன் (1996)

யதார்த்த இளைஞன், தேசபக்தி நிறைந்த முதியவர் என இரட்டை வேடங்களில் கமல் நடித்த படம். நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல், லஞ்சம் போன்றவற்றைத் தனி ஒருவராக ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஒரு மூத்த குடிமகன் இறங்குவதே இந்தப் பட்த்தின் கதை.

துப்பாக்கி :

துப்பாக்கி :

விஜய் நடித்த இந்தப் பட்த்தில் அவர் ஒரு ராணுவ அதிகாரியாக இருப்பார். குறிப்பிட்ட நகரத்தைச் சீர்குலைக்க்க் காத்திருக்கும் தீவிரவாதிகளின் ரகசியத் திட்டங்களைத் தெரிந்துகொண்டு அவர்களை எப்படி வீழ்த்தினார் என்பதே கதைக்களம்.

இப்போது ஏன் இல்லை..?

இப்போது ஏன் இல்லை..?

இதேபோல, இன்னும் பல தேசபக்திப் படங்களும் அவ்வப்போது அந்த்ந்தக் காலகட்டங்களுக்கு ஏற்ற வடிவில் வெளிவந்தன. இப்போது வேற்று நாட்டுக்கார்ர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதை விட நிறைய பிரச்னைகள் நமக்கு இருப்பதால் சமீபமாக தேசபக்தியைத் தூண்டும் எந்தப் படமும் வெளிவரவில்லை. ஜெய்ஹோ!

English summary
Patriot films in tamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil