»   »  மாட்டுத்தாவணி பவித்ரன்!

மாட்டுத்தாவணி பவித்ரன்!

Subscribe to Oneindia Tamil

12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்க வருகிறார் பவித்ரன்.

90களில் சூடான இயக்குநராக இருந்தவர் பவித்ரன். இவரிடமிருந்து பிரிந்து வந்தவர்தான் ஷங்கர். சூரியன் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் பவித்ரன்.

சூரியன் படத்தில் சரத்குமாரின் வித்தியாச நடிப்பையும், கவுண்டமணியின் கலக்கல் காமெடியையும் படத்தில் கொண்டு வந்த பவித்ரன், பிரபுதேவாவை இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்து அவரை பிரபலப்படுத்தினார்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற டோலாக்கு டோல் டப்பிமா பாட்டுக்குப் பிறகுதான் பிரபு தேவா கிடுகிடுவென புகழின் உச்சிக்குச் சென்றார். பின்னர் தனது இந்து படத்தில் பிரபுதேவாவை ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தினார் பவித்ரன்.

கடைசியாக பவித்ரன் இயக்கிய படம் கல்லூரி வாசல். பிரஷாந்த், அஜீத், பூஜா பட் ஆகியோர் நடித்த இப்படத்தின் மூலம்தான் தேவயானி ஹீரோயினாக அறிமுகமானார் (ஆனால் தொட்டாச்சிணுங்கி படம் மூலமாகத்தான் தான் ஹீரோயின் ஆனதாக கூறுவார் தேவயானி, கல்லூரி வாசலை அவர் எங்குமே குறிப்பிடுவதில்லை).

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரும்புகிறார் பவித்ரன். மாட்டுத்தாவணி என்ற பெயரைக் கொண்ட படத்தை இயக்குகிறார். மாட்டுத்தாவணி மதுரையில் உள்ள ஒரு பகுதியின் பெயர். ஒரு காலத்தில் இங்கு மாட்டுச் சந்தை நடைபெறும். ரவுடிகளும் இப்பகுதியில் எக்கச்சக்கம். ஆனால் இப்போது மாட்டுத்தாவணியில்தான் மதுரை மாநகரின் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ளது. மிக முக்கிய பகுதியாக மாறியுள்ளது மாட்டுத்தாவணி.

இந்தப் பகுதியை கதைக்களமாக வைத்துத்தான் தனது மாட்டுத்தாவணி படத்தை இயக்கப் போகிறார் பவித்ரன். ஹீரோ, ஹீரோயினாக புதுமுகங்களை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் பவித்ரன். கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. பவித்ரனுக்குப் பிடித்த தேவாதான் இசையமைக்கிறார்.

வெல்கம் பேக் டூ பவித்ரன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil