»   »  புதுச் சிக்கலில் 'பழனி'

புதுச் சிக்கலில் 'பழனி'

Posted By:
Subscribe to Oneindia Tamil
kajalagarwal

கமர்ஷியல் பஞ்சாமிர்தம் என்ற பன்ச்சுடன் அழைக்கப்படும் பழனி படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தயாரிக்க, இயக்குநர் பேரரசு இயக்க, பரத், காஜல் அகர்வால் இணையில் உருவாகியுள்ள படம் பழனி. பேரரசுவின் அதிரடியான இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்க கமர்ஷியல் பஞ்சாமிர்தம் என டேக்லைன் கொடுத்திருந்தனர்.

ஆனால் பஞ்சாமிர்தத்தை கடை விரிக்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட சிக்கல் அடுத்தடுத்து வந்து பஞ்சாமிர்தத்தை சுவைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இது அக்கா, தம்பி கதை. பாசம், மோதல், காதல், அடிதடி என அனைத்துக் கலவையுடனும் கூடியதாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் பேரரசு. பரத்தின் அக்கா வேடத்தில் நடித்துள்ளார் குஷ்பு. பரத்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு திரைக்கு வரத் தயாராக இருக்கிறது பழனி. இந்த நிலையில் திடீர் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தரப்பில் சில புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே ஷக்தி சிதம்பரம் இயக்கிய வியாபாரி படம் பெரும் தோல்வியை சந்தித்தது. எனவே அதற்குரிய இழப்பீட்டை கொடுத்தால்தான் பழனியை வாங்குவோம் என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனராம். இதனால் பஞ்சாமிர்தத்தை பொங்கலுக்குக் கொண்டு வருவதில் புதுச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

பிரச்சினையை சுமூகமாக முடித்து பழனியை திரைக்குக் கொண்டு ஷக்தி சிதம்பரம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil