»   »  பழனி காஜல்

பழனி காஜல்

Subscribe to Oneindia Tamil

சவுண்டு வசனங்களுக்குப் பெயர் போன இயக்குநர் பேரரசு தான் இயக்கப் போகும் பழனி பட பூஜைக்கான அழைப்பிதழுடன் பஞ்சாமிர்த டப்பாவையும் உடன் கொடுத்து ரவுசு செய்து வருகிறாராம்.

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி என சவுண்டுப் படங்ளாக இயக்கியவர் பேரரசு. இதில் முதல் இரு படங்களும் மெகா ஹிட் படங்ளாக அமைந்தன. அடுத்த இரண்டு படங்களும் மகா நட்டுப் படங்ளாக மாறிப் போயின. அத்தோடு பேரரசுவின் சாம்ராஜ்யமும் சரிந்து போனது.

இடையில் மனைவி தொடர்ந்து வழக்கு வேறு மனிதனை உலுக்கி எடுத்தது. இந்தத் துயரத்திலிருந்து ஒரு வழியாக மீண்டுள்ள பேரரசு இப்போது பழனி என்ற பெயரில் புதிய படத்தை எடுக்க வீறு கொண்டு எழுந்து வந்துள்ளார்.

பரத்தான் பழனியின் நாயகன். காஜல்தான் நாயகி. பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் நாயகியாக நடித்தவர்தான் காஜல். தூக்கி அடிக்கும் அழகுடன், படு குஜாலாக இருக்கிறார் காஜல்.

பரத்தின் அக்கா வேடத்தில் குஷ்பு நடிக்கிறார். இதில் நடிக்க இவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ. 18 லட்சம் என்கிறார்கள். ஆனால் நாயகி காஜலுக்கு 9 தான் கொடுத்தார்களாம்.

படத் தொடக்க விழா ஜூன் 10ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான அழைப்பிதழை படு வித்தியாசமான பாணியில் கொடுத்து வருகிறார் பேரரசு.

அழைப்பிதழுடன் குட்டி பஞ்சமிர்தம் டப்பா, விபூதி பாக்கெட், முருகன் படம் ஆகியவற்றை கொடுத்து கண்டிப்பாக தொடக்க விழாவிற்கு வர வேண்டும் என அன்புடன் அழைத்து வருகிறாராம் பேரரசு.

கமர்ஷியல் படங்களை இயக்கி கலகலக்க வைத்த ஷக்தி சிதம்பரம்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார். அவரது தயாரிப்பில் வெளி இயக்குநர் ஒருவர் இயக்கும் முதல் படம் பழனி.

படத்திற்கு பன்ச் லைனாக கமர்ஷியல் பஞ்சாமிர்தம் என வைத்துள்ளாராம் பேரரசு.

பெரிய ரவுசு பார்ட்டிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil