»   »  பேரரசு சார், இனி 'பேரரசுகாரு'!

பேரரசு சார், இனி 'பேரரசுகாரு'!

Posted By:
Subscribe to Oneindia Tamil


திருப்பாச்சி, சிவகாசி என விஜய்யை வைத்து இரு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த பேரரசு இப்போது தெலுங்குப் பக்கம் தாவுகிறார்.

விஜய்க்கு திருப்பாச்சி, சிவகாசி என ஹிட் கொடுத்தவர், அஜீத்துக்கு மட்டும் 'திருப்பதி லட்டைக் 'கொடுத்து விட்டார். அதேபோல 'தர்மபுரி' மூலம் விஜயகாந்த்துக்கும் 'தர்ம அடி' கொடுத்தார்.

இடையில் சின்ன கேப் விழுந்து சரியாகி இப்போது பரத்தை வைத்து பழனி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் பேரரசு. பரத்துக்கு ஜோடியாக இப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். ஷக்தி சிதம்பரம்தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். படம் முடியப் போகிறது. தீபாவளிக்கு பழனியைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பேரரசுவைத் தேடி தெலுங்கிலிருந்து நிறைய வாய்ப்புகள் வந்துள்ளதாம். முன்னணி ஸ்டார்கள், முன்னணித் தயாரிப்பாளர்கள் என பலரும் பேரரசுவிடம் படம் இயக்கித் தருமாறு அழைக்கிறார்களாம்.

இதற்கெல்லாம் காரணம் பேரரசுவின் திருப்பாச்சி சமீபத்தில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அது பெரும் ஹிட் ஆகவே, பேரரசுவுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டு விட்டது.

தன்னைத் தேடி வந்த வாய்ப்புகளிலிருந்து பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தை மட்டும் இப்போதைக்கு பேரரசு ஒத்துக் கொண்டுள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கவுள்ளதாம்.

தனது தெலுங்கு விஜயம் குறித்து பேரரசு கூறுகையில், நேரடித் தெலுங்குப் படத்தை நான் இயக்கப் போவது உண்மைதான். பிரபாஸ்தான் நாயகன். மற்ற கலைஞர்கள், ஹீரோயின் குறித்து விரைவில் இறுதி செய்வோம்.

அதேசமயம் நான் தமிழை விட்டு விட மாட்டேன். எனது அடுத்த தமிழ்ப் படம் நவம்பர் இறுதியில் தொடங்கும் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil