»   »  பெரியாரை 5 முறை பார்த்த கலைஞர்!

பெரியாரை 5 முறை பார்த்த கலைஞர்!

Subscribe to Oneindia Tamil

பெரியார் படத்தை இதுவரை 5 முறை பார்த்து விட்டாராம் முதல்வர் கருணாநிதி.

பெரியாரின் சிஷ்யர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுபவர் கருணாநிதி. பெரியார் படம் உருவாக அவர்தான் உந்து சக்தியாகவும் இருந்தார். அத்தோடு நில்லாமல், ரூ. 95 லட்சம் அரசு மானியத்தையும் அறிவித்தார் கருணாநிதி.

பெரியார் படத்தை இதுவரை 5 முறை பார்த்து விட்டாராம் கருணாநிதி. படத்தில் பல திருத்தங்களையும் மேற்கொள்ள அறிவுரை கூறி அதன்படி திருத்தங்களும் செய்யப்பட்டதாம்.

பெரியாரின் நிஜ இறுதி ஊர்வலக் காட்சியைப் படத்தில் இணைக்கலாம் என ஐடியா கொடுத்தவரும் கருணாநிதிதானாம். சொன்னதோடு நில்லாமல், பிலிம் டிவிஷன் ஆட்களைக் கூப்பிட்டு அதுதொடர்பான காட்சிகளைக் கொடுக்குமாறும் அறிவுறுத்தினாராம்.

பெரியார் படம் சிறப்பாக ஓட ஆரம்பித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள கருணாநிதி, பெரியார் படத்துக்கு சில கட்டணச் சலுகைகளையும் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதியின் சட்டசபை பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகிறார். அப்போது அவருக்கும் பெரியார் படத்தைப் போட்டுக் காட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil