»   »  பொல்லாதவனுக்கு ஊனமுற்றோர் கண்டனம்

பொல்லாதவனுக்கு ஊனமுற்றோர் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Dhanush with Ramya in Pollathavan
நடிகர் தனுஷ் நடித்துள்ள பொல்லாதவன் படத்தில் ஊனமுற்றோரை மிகவும் இழிவாக சித்தரித்து வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதற்கு தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தனுஷ், குத்து ரம்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீஸான படம் பொல்லாதவன். வெற்றிப் படமாகியுள்ள பொல்லாதவனில் உடல் ஊனமுற்றோரை மிகவும் இழிவாக சித்தரித்துள்ளதாக தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிம்மச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனுஷ் நடித்துள்ள பொல்லாதவன் படத்தில் ஊனமுற்றவர்களை நொண்டி என்று அழைத்து இழிவுபடுத்தியுள்ளனர்.

இதை விடக் கொடுமையாக உடல் ஊனமுற்றோரால் கல்யாணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்த முடியாது என்றும் கூறுவது போல காட்சி வைத்துள்ளனர்.

இந்த செயல் ஊனமுற்றோரின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இப்படிப்பட்ட அவதூறான காட்சிகளை அனுமதித்த சென்சார் வாரியத்தை கடுமையாக கண்டிக்கிறோம்.

இப்படிப்பட்ட காட்சிகளை வைத்ததற்காக இயக்குநர் வெற்றி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த காட்சிகளையும் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிம்மச்சந்திரன்.

நொண்டி என்ற வார்த்தை உடல் ஊனமுற்றோர் நெஞ்சில் எந்தளவுக்கு ஈட்டியைப் பாய்ச்சும் என்பதை சென்சார் போர்டு உணராமல் போனது ஏனோ? ஆபாசத்தை தடுக்க மட்டும் சென்சார் போர்டு இல்லை, இதுபோன்ற அநாகரீகங்களையும் கூட அவர்கள் தடுக்க முன்வர வேண்டாமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil