For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  மிக வித்தியாசமான கதையுடன், மிக பிரம்மாண்டமாய் உருவாகிக் கொண்டுள்ளது பாலாவின் பிதாமகன்.

  சேது மூலம் விக்ரமுக்கு மறுவாழ்வு தந்த பாலா இந்தப் படத்தின் மூலம் அவருக்கு நிச்சயம் தேசிய விருது வாங்கித்தருவார் என்கிறார்கள். நந்தா மூலம் அனைவரையும் சூர்யா பக்கம் திருப்பியவரும் பாலா தான்.

  விக்ரம்-சூர்யா என பவர்புல் பெர்பார்மென்ஸ் ஆசாமிகளை வைத்துக் கொண்டு, தமிழ் இதுவரை பார்த்திராதகதைக் களத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறாராம் பாலா,

  தேனி பகுதியில் சூட்டிங் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்போகிறார்களாம். பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினரான பாலாவுக்கு தேனி பகுதியில்உள்ள அதிமுகவினர் மூலம் சூட்டிங்குக்கு பாதுகாப்பு தந்துள்ளார் பன்னீர்.

  இப்போது பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கியாம். செலவு குண்டக்க மண்டக்க அதிகரித்துவிட்டாலும் பாலாவும்தயாரிப்பாளர் துரையும் கவலைப்படவில்லை. காரணம் விக்ரமுக்கும் சூர்யாவுக்கும் பாலா என்ன சம்பளம்தந்தாலும் ஓ.கே. தான். அவரிடம் அத்தனை மரியாதை வைத்திருக்கிறார்கள். படச் செலவு உயர்ந்துவிட்டதால்சம்பளத்தை குறைத்தே கொடுப்பார் என்கிறார்கள்.

  இதில் பிதாமகன் என்பது கிராமத்தின் பெயராம். இதில் விக்ரமுக்கு சுடுகாட்டு வெட்டியான் வேடம். அந்த ஊரின்லோக்கல் அநாதை ரெளடி கேரக்டர் சூர்யாவுக்கு. இருவரும் தோஸ்துகள்.

  படத்தில் விக்ரமின் பெயர் சித்தன். சூர்யாவின் பெயர் சக்திவேல். இதில் சூர்யாவுக்கு காதலியாக லைலாநடிக்கிறார். மஞ்சு என்ற பெயருடன் பாலிடெக்னிக்கில் படிக்கும் பெண்ணாக வருகிறார் லைலா. இந்தக் காதலால்ஏற்படும் விவகாரம் தான் கதையாம். காதலை விக்ரம் எதிர்க்க இதனால் நேரும் மோதல் என்றரீதியில் கதைபோகிறது என்கிறார்கள் சூட்டிங் ஸ்பாட்காரகள்.

  இவர் தவிர சிம்ரன், ரசிகாவும் இருக்கிறார்கள். சிம்ரனுக்கு ஓல்டு கெட்-அப் என்கிறார்கள். இல்லை, இல்லை ஒருபாட்டுக்கு டான்ஸ் என்கிறார்கள். விவரம் தர மறுத்துவிட்டார் பாலா.

  அதே போல கிளு கிளு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ரசிகாவை இதில் ஏழை, கள்ளச் சாராயம் விற்கும்பெண்ணாக மாற்றியிருக்கிறார் பாலா. இந்த கேரக்டருக்கு முதலில் மாளவிகாவை புக் செய்து பின்னர்நீக்கிவிட்டனர்.

  கதையை விக்ரமிடம் பாலா சொல்லிவிட்டு அதற்கேற்ப உங்கள் கெட்-அப்பையும் மாற்ற வேண்டும் என்றுசொல்ல, உடனே தனது மேக்கப் ரூமுக்குள் போய் விகரமே தனது தலைமுடியை வெட்டிக் கொண்டு, முகத்தில்வறுமைக் கோடுகளைப் பூசிக் கொண்டு, கசங்கிய சட்டையுடன் அசல் வெட்டியானாகவே வந்து நின்று பாலாவைஅசத்தி இருக்கிறார். அதே கெட் அப்பில் தான் நடித்தும் வருகிறார்.

  அதே நேரத்தில் சூர்யாவிடம் பாலா கதையைச் சொல்ல வர அதை தடுத்துவிட்டாராம். நீங்கள் எடுப்பது தான் படம்.அதில் நடிப்பது என் கடமை. உங்களிடம் கதை கேட்டுத்தான் கால்ஷீட் தர வேண்டும் என்ற அளவுக்கு நான்பெரிய ஆள் இல்லை என அடக்கமாகக் கூறியிருக்கிறார். இதைச் சொல்லி சொல்லி மகிழ்கிறார் பாலா. சூர்யா என்தம்பி மாதிரி என்கிறார்.

  படத்தில் 5 பாடல்கள். இசைஞானி இளையராஜா மிரட்டியிருக்கிறார் என்கிறார்கள் பாலாவுக்குநெருக்கமானவர்கள்.

  சூர்யா, விக்ரம் என தமிழின் இன்றைய முன்னணி ஹீரோக்கள் நடித்தாலும் இது பாலாவின் படம் என்ற பேச்சு தான்கோடம்பாக்கத்தில் உள்ளது. பாலசந்தர், பாரதிராஜா, ஷங்கருக்கு அடுத்தபடியாய் தமிழில் ஹீரோக்களைஒதுக்கிவிட்டு ஒரு டைரக்டரை வைத்துப் படம் பேசப்படுவது பாலாவுக்குத் தான்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X