»   »  இந்தியில் பிதாமகன்

இந்தியில் பிதாமகன்

Subscribe to Oneindia Tamil

தமிழில் புதிய பிரளயத்தை ஏற்படுத்திய பாலாவின் பிதாமகன் இந்தியில் ரீமேக் ஆகிறது. பாலாவே படத்தை தயாரிக்கிறார்.

வீழலுக்கு இறைத்த நீராக வீணாகிக் கொண்டிருந்த விக்ரமை கூட்டி வந்து சேது மூலம் பிரமிக்க வைத்தவர் பாலா. விருது நிச்சயம் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் பாலிட்டிக்ஸ் உள்ளே புகுந்து விக்ரமுக்கு விருது கிடைக்காமல் போனது.

இருந்தாலும் விடாத பாலா, பிதாமகன் மூலம் விக்ரமுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்து விட்டுத்தான் ஓய்ந்தார். தமிழ் சினிமாவில் வித்தியாச படைப்பு பிதாமகன்.

ஒருபக்கம் பேசாமலேயே கலக்கிய விக்ரம், இன்னொரு பக்கம் பேசிப் பேசியே கலகலக்க வைத்த சூர்யா, வெல்லெலி குஞ்சாக கிறீச்சிட்ட லைலா, கஞ்சாக் கன்னியாக ரசிகா என படம் முழுக்க பிரமாதப்படுத்தியிருந்தார் பாலா.

பிதாமகன் விக்ரமுக்கு மைல் கல்லாக அமைந்தது. இப்போது இப்படம் இந்திக்குப் போகிறது. இந்தியில் இதைத் தயாரிக்கப் போகிறவர் பாலாஜி (நம்ம பாலாதான்). கூட ஒரு இந்தித் தயாரிப்பாளரையும் துணைக்குச் சேர்த்துக் கொள்ளவுள்ளார்.

கேமராமேன் திரு தான் இந்தி பிதாமகனை இயக்கவுள்ளார். விக்ரம் நடித்த வேடத்துக்கு அஜய் தேவ்கனை கேட்டுள்ளனர். சூர்யா நடித்த வேடத்துக்கு அபிஷேக் பச்சனைப் பேசி வருகின்றனர். எல்லாம் முடிந்த பின்னர் படப்பிடிப்பு குறித்து அறிவிக்கவுள்ளனர்.

ஏற்கனவே கஜினியை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அமீர்கான், ஆசின் நடிப்பில் அப்படத்தின் ஷூட்டிங்கி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் பிதாமகனும் பிரளயத்தைக் கிளப்ப இந்திக்குப் பறக்கிறது.

லைலா வேடத்தில் ஐஸா??

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil