விஜய் சேதுபதிக்கு முன்னாடி இந்த கதை இத்தனை பேர தாண்டி வந்துச்சா? தயாரிப்பாளர் சொன்ன மாஸ் தகவல்!
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் விநியோகஸ்தர் என்று பன்முக திறமை கொண்டவர் சி.வி.குமார்.
இவர் தலைமையில் சொந்தமாக "திருகுமரன் என்டர்டெயின்மென்ட்" என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், 2012ஆம் ஆண்டு வெளியான 'பீட்சா ' திரைப்படத்தின் வரவு, செலவு எவ்வளவு என்று விளக்கமாக யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் சிவி குமார்.

தயாரிப்பாளரின் முதல் மூன்று திரைப்படம்
சிவி குமார் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இதற்கு அடுத்து வெளியான 'பீட்சா ', 'சூது கவ்வும்' போன்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலமாக நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரையும் பெற்றார். இவர் தயாரித்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றதோடு வசூல் ரீதியாக நல்ல வருவாயே ஈட்டி கொடுத்தன

நடிக்க ஆர்வம் இல்லாத நடிகர்கள்
தயாரிப்பாளர் சி வி குமார், கார்த்திக் சுப்புராஜின் பீட்சா கதையை கேட்டு தயாரிக்க முன் வந்தார். இந்தக் கதையை பிரசன்னா, வைபவ் மற்றும் நடிகை ஓவியா போன்ற நடிகர்களிடம் சொல்லியபோது யாரும் இந்த கதையில் நடிக்க முன்வரவில்லை. சி வி குமார் தற்செயலாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை சந்தித்து அவரிடம் பீட்சா கதையை சொன்ன போது; கதை நல்ல இருக்கு, நானே தயாரிக்கிறேன், இந்த கதையில் சித்தார்த் நடித்தால் நல்லா இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

விஜய்சேதுபதி தான் நடிக்க வேண்டும்
தயாரிப்பாளர் சிவி குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் இந்த கதையில் சித்தார்த் நடிக்க வைக்கலாமா என்று கேட்டபோது, அதெல்லாம் சரி வராது சார் அவரிடம் சொன்னால் கதையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, விஜய் சேதுபதி நான் இயக்கிய குறும்படத்தில் நடித்திருக்கிறார்; அதனால் அவரே நடித்தால் நல்லா இருக்கும் என்று சொல்லி விட்டார். இந்த தகவலை அறிந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சரிங்க சார் நீங்க விஜய் சேதுபதி வைத்து தயாரிங்க என்று சி.வி குமாரிடம் சொல்லி இருக்கிறார்.

வசூலில் சாதனை படைத்த பீட்சா திரைப்படம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளரிடம் கதையை சொன்னபோது வெறும் 70 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்று சொல்லி இருக்கிறார், பதிலுக்கு அவர் இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் எடுக்க வேண்டாம்; ஒரு 2 கோடி ரூபாய் வரை பட்ஜெட் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படம் 30 நாளில் எடுத்திருக்கிறார்கள், இறுதி நாள் ஷூட்டிங் அன்று கணக்கு பார்த்த பொது வெறும் 50 லட்சம் ரூபாய் தான் செலவு செய்திருந்தார்கள், முழுமையான தயாரிப்பு செலவு 1 கோடி 42 லட்சம் தான் ஆனால் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி கொடுத்ததோடு விமர்சனம் ரீதியாக இந்த படம் நல்ல பாராட்டுகளையும் பெற்று கொடுத்தது.


Click it and Unblock the Notifications











