»   »  கலைஞர் கதை - பா.விஜய் ஹீரோ!

கலைஞர் கதை - பா.விஜய் ஹீரோ!

Subscribe to Oneindia Tamil


முதல்வர் கருணாநிதி எழுதிய தாய் காவியம் நாவல், திரைப்படமாகிறது. கவிஞர் பா.விஜய் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவரே இப்படத்தைத் தயாரிக்கவும் போகிறார்.

Click here for more images

கருணாநிதியின் கை வண்ணத்தில் சமீபத்தில் வெளியான நாவல் தாய் காவியம். இந்தக் கதை தற்போது திரைப்படமாக உருவெடுக்கிறது.

கவிஞர் பா.விஜய், கே.பி.நாராயணன், ஜே.எஸ். ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர். இதில் விஜய்யே நாயகனாகவும் நடிக்கிறார்.

நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் சமூகப் போராளியாக மாறுவதுதான் இப்படத்தின் கதை. சமூகப் போராளியாக நடிக்கிறார் விஜய்.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான ஹீரோக்கள் உருவாகி வருகிறார்கள். டான்ஸ் மாஸ்டர்கள் ஹீரோக்கள் ஆகிறார்கள், அரசியல்வாதிகளும் ஹீரோக்களாகியுள்ளனர். அந்த வரிசையில் பாடலாசிரியரான பா.விஜய்யும் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தில் பா.விஜய்க்கு இரண்டு ஜோடிகளாம். அவர்கள் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. பார்த்திபனின் உதவியாளரான பாலி ஸ்ரீரங்கம் இப்படத்தை இயக்கவுள்ளார்.

அக்டோபர் 20ம் தேதி முதல்வர் கருணாநிதியின் வீட்டில் படத் தொடக்க விழா நடைபெறுகிறது. படம் முழுவதும் தூத்துக்குடியிலேயே படமாக்கப்படவுள்ளது.

எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ள பா.விஜய், ஆட்டோகிராப் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விஜய் போல ஆவாரா அந்த விஜய்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil