»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil


பொங்கல் படங்களில் யாரும் எதிர்பாராதபடி, விஜய்காந்த் நடித்த எங்கள் அண்ணா படம் வசூலில் முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறது.

பொங்கலையொட்டி கோவில், விருமாண்டி, எங்கள் அண்ணா, ஜெய், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஆகிய படங்கள்வெளியாகின. இதில் கோவில் படம் 10ம் தேதியே வெளியாகிவிட்டது. சிம்பு தனது விரல் வித்தைகளும், தத்து பித்தென்று பேசும்பஞ்ச் டயலாக்குகளும் இல்லாமல் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்ததால் படம் தப்பியது.

முதலில் வந்ததைப் போலவே, போட்ட காசையும் முதலில் எடுத்துக் கொண்டது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையும், வடிவேலுவின்காமெடியும் படத்தைக் காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான விருமாண்டி ஏ சென்டர்களில் வசூலை அள்ளியது. பி மற்றும் சி சென்டர்களில் கூட்டம்எதிர்பார்த்தபடி இல்லை. முதல் வாரத்தில் இருந்த ஏகப்பட்ட பரபரப்பு குறைந்துவிட்டதால், கூட்டமும் குறையஆரம்பித்துவிட்டது. வரும் நாட்களில் வசூல் மேலும் குறைய வாய்ப்புள்ளது. படத்தில் சிறைச்சாலை காட்சி மிக மிக நீளம் என்றுபுகார் உள்ளது. ரிலீஸ் ஆகியிருந்தாலும் பரவாயில்லை என்று கமல் தியேட்டர் தியேட்டராகப் போய், அந்தக் காட்சியைவெட்டுவது நல்லது.

தனுஷூக்கு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (கொஞ்சம் சின்ன பெயரா வச்சிருக்கக் கூடாது?) படம் ஒரு திருஷ்டிக் கழிப்பு.படத்தில் தனுஷ் ஒரு பொண்ணை இழுத்துக் கொண்டு, உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் போல் நாடு, நாடாக ஓடுகிறார். படம்பார்ப்பவர்களே மூச்சு வாங்க ஆரம்பித்து, வீட்டிற்கு கிளம்பி விடுகின்றனர்.

தனுஷூக்காக வந்த கூட்டம் இரண்டு நாட்கள்தான் இருந்தது. அதன்பின் படம் அவ்வளவாக வசூல் இல்லை. தனுசுக்கு இது முதல்தோல்விப் படமாக அமையும் என்கிறார்கள்.

பிரஷாந்த் இரு வருடங்களாக நடித்த படம் ஒரு வாரத்தைத் தாண்டுவதற்கு படாதபடு படுகிறது. ஜெய் ஜெயிக்கவில்லை.வழக்கமான பழி வாங்கல் கதையை வழக்கமான பாணியில் படமெடுத்ததால், பிரசாந்தின் மற்ற படங்களைப் போல இப் படமும்வழக்கமாக படுத்துக் கொண்டது.

உடலை முறுக்கோடு வைப்பததற்கு 3 மாதங்கள் வெளிநாடுகளில் செலவிட்டவர், கதையை முறுக்காக்குவதற்கு ஒரு மாதம்செலவிட்டிருக்கலாம். பிரசாந்த், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான எங்கள் அண்ணா படம், வினியோகஸ்தர்கள் எல்லோரையும் காப்பாற்றியுள்ளது.வடிவேலுவின் காமெடி இந்தப் படத்திற்குப் பெரிய பலம்.

பிரெண்ட்ஸ் படத்தை இயக்கிய சித்திக்தான் இப்படத்திற்கும இயக்குநர். முந்தைய படத்தைப் போலவே, இதிலும் காமெடி,குடும்ப செண்டிமெண்ட், சண்டை என எல்லாவற்றையும் கலந்து ஒரு காக்டெயில் பார்ட்டி கொடுத்திருக்கிறார். மற்ற படங்களுக்குஇருந்த எதிர்பார்ப்பு இப் படத்திற்கு இல்லாததே, அதன் வெற்றிக்கு காரணமாகி விட்டது.

அதே நேரம் பொங்கலுக்கு வந்த படங்களில் சூப்பர் ஹிட் என்று சொல்லுமளவிற்கு எந்த படமும் இல்லை என்பதே உண்மை.ஜெய்யும், புதுக்கோட்டையிலிருந்து சரவணனும் வினியோகஸ்தர்களின் கையைக் கடித்துவிட்டது. கோவிலும், விருமாண்டியும்வினியோகஸ்தர்களுக்கு லாபம் தந்திருந்தாலும் பெரிய அளவுக்கு ஏதும் அவர்களுக்குத் தேறவில்லை.

எங்கள் அண்ணாவைத் தான் நம்ம அண்ணா என்று வினியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். விஜய்காந்துக்கு பி, சி சென்டர்களும்எப்போதுமே பலமுள்ளவை என்பதால் அங்கும் லாபம் கொட்டுகிறது.

ஜெய் படம் சரியா போகவில்லை என்று வெளிப்படையாகவே சொல்லும் வினியோகஸ்தர்கள், விருமாண்டி மற்றும்புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படங்கள் அவ்வளவாக லாபம் தராததை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள்.அமைதியாய் இருந்தால் கமல் மற்றும் தனுஷின் அடுத்த படங்கள் தங்களுக்கு குறைந்து விலைக்குத் தரப்படும் என்றநம்பிக்கையில் இருக்கிறார்கள்.

வினியோகஸ்தர்களுக்குத் தான் ஜெய் கையைக் கடித்திருக்கிறது. ஆனால், படத்தை கொழுத்த விலைக்கு விற்றுவிட்டதால்தயாரிப்பாளரான பிரசாந்தின் தந்தை தியாகராஜனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil