»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தைப் பொங்கல் திருநாளன்று தமிழ் கூறும் நல்லுலகை மகிழ்விக்க வருகிறது 10 திரைப்படங்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான படங்கள் இந்தப் பொங்கல் தினத்தன்று திரைக்கு வருவதால் திரையுலகினரும்,ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

விஜய்யின் திருப்பாச்சி, சரத்குமாரின் ஐயா, சத்யராஜின் அய்யர் ஐ.பி.எஸ், தனுஷின் தேவதையைக் கண்டேன், பிரஷாந்த்தின்ஆயுதம், முரளியின் அறிவுமணி ஆகியவை அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்.

பொங்கலுக்கு வெளியாகவுள்ள படங்கள் குறித்த ஒரு ரவுண்ட் அப்...

திருப்பாச்சி:

கில்லியின் மெகா ஹிட் வெற்றிக்குப் பிறகு விஜய்-த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் படம். ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ்தயாரிப்பில் விஜய் நடிக்கும் 5வது படம், விஜய்க்கு இது 40வது படம்.

இத்தனை சிறப்புகளுடன் வரும் திருப்பாச்சி படத்தின் கதை வழக்கமான ஆக்ஷன் கதைதான். ஆனால் சிஸ்டர் சென்டிமென்ட்டைகூடவே சேர்த்து கதைக் களத்தை வித்தியாசப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் பேரரசன்.

இவர் ராம.நாராயணன், மகாராஜன், தரணி ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். விஜய்யின் கேரக்டருக்குப் பெயர்சிவகிரி. இவரது குடும்பத்தினர் அனைவரும் அரிவாள்கள் தயாரிப்பவர்கள்.

சொந்த ஊர் திருப்பாச்சி (அதாவது திருப்பாச்சேத்தி). விஜய்யின் தங்கையாக வருகிறார் ஆட்டோகிராப் புகழ் மல்லிகா.வழக்கமான விஜய்யின் ஆக்ஷனுடன், சகோதரிப் பாசமும், காமெடியும் சேர்ந்து விஜய் பின்னி எடுத்திருக்கிறாராம்.

த்ரிஷாவுடன் இவர் போட்டுள்ள ஆட்டம், கில்லியை தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவுக்கு கும்மென்று வந்துள்ளதாம்.

விஜய், த்ரிஷா, மல்லிகா தவிர ஆட்டோகிராப் பெஞ்சமின், மனோஜ் கே ஜெயன், பசுபதி, கோட்டா சீனிவாச ராவ், புதுமுக வில்லன்ஆர்யன் ஆகியோரும் உள்ளார்கள். விஜய்யின் அம்மாவாக புது அவதாரம் எடுத்திருக்கிறார் சங்கராபரணம் புகழ் ராஜலட்சுமி.

விக்ரமின் நிஜமான தந்தையான வினோத்ராஜ், விஜய்யின் அப்பாவாக இந்தப் படத்தில் நடிப்பது விசேஷம். ஒரு பாட்டுக்குகுத்தாட்டம் போட்டு கலக்கியிருக்கிறார் சாயா சிங்.

இசைக்கு தினா, சண்டைக்கு ராக்கி ராஜேஷ், கேமராவுக்கு சரவணன். திருப்பாச்சி, விஜய் ரசிகர்களுக்கு செமத்தியான பொங்கல்விருந்தாக அமையும்.

ஐயா:

கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பான ஐயா, இயக்குநர் ஹரியின் கதையில் உருவாகும் படம்.

இந்தக் கதை ரஜினிக்காக உருவாக்கப்பட்டது என்று முன்பு கூறப்பட்டது. அந்தக் கதையைத்தான் சரத்குமாருக்கு ஏற்றது போலமாற்றி எடுத்திருக்கிறார்கள்.

ஹரியும், சரத்குமாரும் இணைவது இது முதல் முறை. கவிதாலயா தயாரிப்பில் ஹரியின் படம் வருவது இது இரண்டாவது முறை.முதல் தயாரிப்பான சாமி கொடுத்த மாபெரும் ஹிட்டால்தான் கவிதாலயா பெரும் பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டது.

சரத்குமார் இதில் இரு வேடங்களில் நடிக்கிறார். அப்பா-மகன் வேடம். அப்பாவுக்கு ஜோடி லட்சுமி, மகனுக்கு ஜோடி நயனதாரா.

இரு கிராம மக்களுக்கு இடையே கால்பந்துப் போட்டி ஒன்று நடக்கிறது. போட்டியின் நடுவே இரு கிராமத்து மக்களுக்கும்இடையே பிரச்சினை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து இரு கிராமத்தினரும் பரம விரோதிகளாகின்றனர்.

இந்தப் பிரச்சினையால் இரு கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இவற்றை எப்படி சரத்குமார் தீர்த்து வைக்கிறார்என்பதுதான் கதையாம்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, குற்றாலம், திருச்செந்தூர் என தென் மாவட்டங்களில் முழுப் படப்பிடிப்பையும் நடத்திமுடித்துள்ளார்கள்.

கொட்டும் மழையில் கால்பந்துப் போட்டி நடக்கும் காட்சியை 1,500 துணை நடிகர்கள் மற்றும் உள்ளூர் மக்களை வைத்து மிகபிரமாண்டமாக ஷூட் செய்துள்ளார்களாம்.

சரத்தும், நயனதாராவும் இடம் பெறும் பாடல் காட்சிகள் குளு குளு மூணாறு மற்றும் கர்நாடகத்தின் குளுமையான இடங்களில்படம் பிடிக்கப்பட்டுள்ளது.

சரத், லட்சுமி, நயனதாரா தவிர வடிவேலு, நெப்போலியன், பிரகாஷ் ராஜ், ரோகினி, சார்லி,

மாளவிகா, சிந்து ஆகியோரும் உள்ளனர். வடிவேலுவின் காமெடி படு தூக்கலாக வந்துள்ளதாம்.

படத்திற்கு இசை பரத்வாஜ். அவரது மகள் ஜனனி இந்தப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளாராம்.

சரத்குமார் ரசிகர்களை மட்டுமல்லாது அனைவரையும் கவரும் வகையில் உருவாகியிருக்கிறார் ஐயா என்கிறார் இயக்குநர் ஹரி.

அய்யர் ஐ.பி.எஸ்.

2004ம் ஆண்டில் அதிகபட்ச படங்களில் நடித்த ஹீரோவான சத்யராஜுக்கு இந்த ஆண்டின் ஆரம்பமே படு கலக்கலாக இருக்கும்என்பதை நிரூபிக்கப் போகும் படம் அய்யர் ஐ.பி.எஸ்.

கடந்த வருடம் சத்யராஜ் நடித்து வெளியான அத்தனை படங்களுமே படுஜாலியான படங்கள். எதிலுமே அவர் சீரியஸாகநடிக்கவில்லை. அத்தனை படங்களிலும் படு கேஷுவலாக வந்து போயிருப்பார். வசூலிலும் அவை பெரிய நஷ்டத்தைக்கொடுக்கவில்லை.

அய்யர் ஐ.பி.எஸ்.ஸில் சத்யராஜ் இரு வேடங்களில் வருகிறார். ஒருவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி,இன்னொருவர் மிகப் பயங்கரமான தாதா.

தாதா சத்யராஜ் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறாராம். தாதாவை வேட்டையாடி வீழ்த்தும் கதைதான் இது என்றாலும்கதையில் வித்தியாசம் காட்டியிருக்கிறேன் என்கிறார் இயக்குநர் ஹரிராஜன். இவர் ஏராளமான டிவி தொடர்களை எடுத்துபிரபலமானவர்.

குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும்படியான ஆக்ஷன் கதை இது என்கிறார் ஹரிராஜன். சத்யராஜுக்கு ஜோடியாக வருபவர்சங்கவி. இன்னொரு ஜோடியாக வருபவர் மும்பை குட்டி மேகா.

இவர்கள் தவிர கவர்ச்சி விருந்துக்காக பாபிலோனா, அபிநயாஸ்ரீ, ஜூனியர் சில்க் ஆகியோரும் உள்ளனர். வழக்கம்போலவடிவேலுவின் காமெடிதான் படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருக்கப் போகிறது.

இவர்கள் தவிர சத்யப்பிரியா, பாண்டு, அனுமோகன், மகாநதி சங்கர், ராகசுதா ஆகியோரும் உள்ளனர். தினாஇசையமைத்துள்ளார்.

குடும்பத்தோடு பார்க்கிறோமோ இல்லையோ, சத்யராஜ் செய்யும் அலம்பல்களை ரசித்து விட்டு வரலாம்.

தேவதையைக் கண்டேன்:

ட்ரீம்ஸ் தோல்வியால் கல்யாண ஜாலியையும் மீறிய சோகத்தில் இருக்கும் தனுஷுக்கு தேவதையைக் கண்டேன் மிகப் பெரியஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

துள்ளுவதோ இளமைக்குப் பிறகு ஏகப்பட் படங்களில் புக் ஆனார் தனுஷ். அதில் ஒன்றுதான் தேவதையைக் கண்டேன். ரொம்பநாட்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் ஒரு வழியாக ரெடியாகி விட்டது.

விஜயக்குமாரின் கடைசி திரை வாரிசான ஸ்ரீதேவி, தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். டீக் கடை பையனாக வருகிறார் தனுஷ்.கல்லூரி மாணவி ஸ்ரீதேவி. இருவருக்கும் காதல் பிறக்கிறது.

இந்தக் காதல் எப்படியெல்லாம் போகிறது, இருவரது வாழ்விலும் வீசும் புயல் என தேவதையைக் கண்டேன் படத்தின் கதைபோகிறது.

ரோஜா கம்பைன்ஸ் சார்பில் காஜா மொகைதீன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பூபதி பாண்டியன். இவர்சுந்தர்.சி, பார்த்திபன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

படத்தின் முக்கிய அம்சம், மும்தாஜும், சீனா தானா புகழ் ரகஸ்யாவும் அட்டகாசமான குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளனர். படத்தின்கிளைமாக்ஸ் காட்சி யாரும் ஊகிக்க முடியாத அளவுக்கு படு விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்து சோர்ந்து போயுள்ள தனுஷுக்கு தேவதையைக் கண்டேன் பிரேக் கொடுக்குமா?

ஆயுதம்:

பிரஷாந்த், ஸ்னேகா இணையும் இரண்டாவது படம். இருவரும் சேர்ந்து நடித்த படமான

விரும்புகிறேன்தான், ஸ்னேகாவுக்கு முதல் படம் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.

படு பிரமாதமான கதையமைப்புடன் ஆயுதம் படத்தை நேர்த்தியாக உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் எம்.ஏ.முருகேஷ்.படத்தைத் தயாரித்திருப்பது பிரஷாந்த்தை வைத்து ஏற்கனவே ஜீன்ஸ், ஜோடி ஆகிய இரு வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளசிடிவி நிறுவனத்தார்.

சென்னை, மதுரை, நாகர்கோவில், லண்டன் என வித்தியாசமான ஸ்பாட்களில் படத்தை ஷூட்

செய்திருக்கிறார்கள். லண்டனில் எடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சிகள் படு ஜாலியாக வந்திருக்கிறதாம்.

லண்டன் தெருக்களில் ஸ்னேகா போட்ட குத்தாட்டம் படத்துக்கு பலமாக இருக்குமாம். படத்தின் இன்னொரு பலம் வடிவேலு.பிரஷாந்த் நடித்த வின்னர் படம் ஓடியதற்கு முக்கியக் காரணமே

வடிவேலுதான். அதே ஜோடி ஆயுதத்திலும் சேர்ந்து கலக்கியுள்ளதாம்.

தினா இசையமைப்பில் பாடல்கள் நன்றாக வந்துள்ளதாம். பிரஷாந்த், ஸ்னேகா, வடிவேலு தவிர, ஜனகராஜ், மன்சூர் அலிகான்,ராஜேஷ், கலைராணி ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

மும்பை அழகி மினால் மற்றும் ரஸ்னா ஆகியோரின் கவர்ச்சி ஆட்டமும் படத்தில் உண்டு. சரி படத்தின் கதை என்ன?

கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான். இதுதான் படத்தின் கதையும் என்கிறார் முருகேஷ். அது சரி!

தொடர்ச்சி...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil