»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மனதில்:

படத்தை எடுக்க ஆரம்பித்து பல காலமாகிறது. படம் முடிந்தும் பல காலமாகிறது. இப்போதுதான் படம் வெளியாவதற்கு நல்லகாலம் பொறந்துள்ளது.

கார்த்திக் இரு வேடங்களில் நடித்துள்ள படம் மனதில். அவருக்கு ஜோடியாக வருபவர் கெளசல்யா. ஒரு கார்த்திக் வில்லனாக,வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார்.

பாசிலிடம் உதவியாளராக இருந்த மகேஷ் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள மனதில், வித்தியாசமான கதையைக்களமாகக் கொண்டது. இரு கார்த்திக்கும் கெளசல்யாவை காதலிக்கிறார்கள். கடைசியில் யாரை கெளசல்யா கரம் பிடிக்கிறார்என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயா, விஜயக்குமார், வையாபுரி, சார்லி ஆகியோருடன் புதுமுக ஜோடியாக பாபு-சுஜாவும்நடித்திருக்கிறார்கள்.

மனதில் படம் மக்களைக் கவருமா என்பதை பொங்கலுக்குப் பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.

அறிவுமணி:

ரொம்ப நாட்களுக்குப் பிறகு முரளி நடித்து வெளியாகும் படம். படம் ரொம்ப நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்தது.

முரளிக்கு ஜோடியாக வருபவர் மீரா வாசுதேவன். அவருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம். இதுதவிர புதுமுகம் ஸ்ரீஷாஎன்பவரும் முரளியுடன் நடித்துள்ளார். அகத்தியனிடம் உதவியாளராக இருந்த எம்.ஏ.கென்னடி என்பவர் அறிவுமணியைஇயக்கியுள்ளார்.

அமைதியான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது, அவனது வாழ்க்கை திசைமாறி தடுமாறிப் போகிறது. இதுதான் படத்தின் கதை.

முரளி, மீரா வாசுதேவனுடன், ரமேஷ் கண்ணா, அஜய் ரத்தினம், தேவன், டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் உள்ளனர். டிராகன்சிங்கிலி என்பவர் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். ஜானகிராஜ் என்பவர் இசையமைத்துள்ளார்.

அறிவுமணி முரளிக்கு எந்த வகையில் உதவப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

டான்ஸர்:

ஜெயலலிதாவுக்கு திரைத் துறையினர் நடத்திய பாராட்டு விழாவின்போது ஒற்றைக் காலில் குட்டி என்பவர் ஆடிய டான்ஸையாராலும் மறந்திருக்க முடியாது. அந்த குட்டி நடித்துள்ள படம்தான் டான்ஸர்.

இயக்குநர் கேயார் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் டான்ஸர், கிட்டத்தட்ட மயூரி படக் கதை போன்றதுதான்.விபத்தில் காலை இழக்கிறார் நடனக் கலைஞரான குட்டி. அதன் பிறகு அவரது வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

மன வலிமை, விடா முயற்சியால் அந்தக் கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக்கி சாதனை செய்கிறார் குட்டி. க்ன்னைஉதாசீனப்படுத்தியவர்களை வெட்கித் தலை குனிய வைக்கிறார்.

குட்டி அந்தப் பெயரிலேயே படத்தில் வருகிறார். அவர் தவிர கனிகாவும் இருக்கிறார். வில்லனாக வருகிறார் ராபர்ட் (நடிகைஅல்போன்சாவின் தம்பி).

குட்டியின் சொந்த வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை இந்தப் படத்தில் சேர்த்திருக்கிறாராம் கேயார். குட்டி இந்தப் படத்தில்ஒற்றைக் காலில் டான்ஸ் மட்டும் ஆடுவதோடு இல்லாமல் சண்டை போடுகிறார், பைக் ஓட்டுகிறார்.

காதல் கதையாக இல்லாமல் சாதனை வேட்கை கொண்ட ஒரு இளைஞனின் கதையாக இதை கொடுத்திருப்பதாக கேயார்கூறுகிறார். வணிக நோக்குடன் இந்தப் படத்தை இயக்கவில்லை என்று கூறும் கேயார், டான்ஸர் மூலம் உடல் ஊனமுற்றவர்களுக்குதான் மிகப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்.

உள்ளக் கடத்தல்:

காற்றுக்கென்ன வேலி என்ற படத்தைக் கொடுத்த புகழேந்தி தங்கராஜின் இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படம்தான் உள்ளக்கடத்தல்.

பத்திரிக்கையாளராக இருந்து இயக்குநராக மாறியவர் புகழேந்தி. விக்னேஷ், குட்டி ராதிகா ஜோடியுடன் உருவாகியுள்ள உள்ளக்கடத்தல் படத்தில் யுகேந்திரன், பிரியதர்ஷினி ஆகியோரும் உள்ளனர்.

இவர்கள் தவிர கோகுல், லதா, சுரேஷ், எட்வின், பிரமோத், ஆர்த்தி ஆகிய புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறார் புகழேந்தி.

இது ஒரு சாதாரண காதல் கதைதான். ஆனாலும் இதை மிகவும் வித்தியாசமாக கொடுத்துள்ளேன். கிளைமாக்ஸ் காட்சிஅனைவரையும் மிகவும் கவரும் என்று தனது படம் குறித்துக் கூறுகிறார் புகழேந்தி.

பரத்வாஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் மெலடிப் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

உள்ளக் கடத்தல் என்று பெயரிலேயே வித்தியாசம் காட்டியிருக்கும் புகழேந்தி தங்கராஜின் இரண்டாவது படம் மக்களின்உள்ளத்தைக் கவரட்டும்.

ஜதி:

பெரிய பெரிய குதிரைகளோடு சேர்ந்து வெற்றிக் களம் காண புகுந்துள்ளது சின்னக் குதிரையான ஜதி.

முற்றிலும் புதுமுகங்கள் நிறைந்த இந்தப் படத்தின் ஹீரோயின் சுஜிதா. ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள சுஜிதா அதன் பின்னர்டிவி தொடர்களுக்குத் தாவினார். இப்போது மீண்டும் வெள்ளித் திரைக்கு திரும்பியுள்ளார்.

டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் நடனம் பயின்ற மாணவரான சத்யா என்பவர்தான் படத்தின் ஹீரோ. இந்தப் படத்தில் அம்பிகா,நிழல்கள் ரவி, சீதா, ராஜீவ் ஆகியோரும் உள்ளனர்.

விஜயராகவா என்பவர் படத்தை இயக்கியுள்ளார். காதல் பிளஸ் இசையை களமாகக் கொண்ட கதை ஜதி என்று கூறும்விஜயராகவா, வித்தியாசமான காட்சி அமைப்புகளுடன் ஜதி அமர்க்களமாக உருவாகியுள்ளாதாக தெரிவிக்கிறார்.

விஜய், சரத்குமார், சத்யராஜ் என பெரிய பெரிய குதிரைகளுக்கு மத்தியில் ஜதியும் களம் கண்டுள்ளது. "என்ன ஆகும்" என்பதைபொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம்.

முதல் பக்கம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil