»   »  பொங்கல்-கலக்கும் மெகா டிவி

பொங்கல்-கலக்கும் மெகா டிவி

Subscribe to Oneindia Tamil
MEGA Tv
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன், ராஜ், விஜய், கலைஞர், மக்கள் தொலைக்காட்சிகள் 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.

இவர்களுடன் கலக்க சமீபத்தில் துவங்கப்பட்ட மெகா டிவியும், மெகா நிகழ்ச்சிகளுடன் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளை ஜனவரி 15,16,17ம் தேதிகளில் ஒளிபரப்புகிறது.

ஜனவரி 15 நிகழ்ச்சிகள்:

காலை 6.30 மணிக்கு தைப் பொங்கல் விழாவை பற்றி கல்லூரி மாணவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் சூரிய வழிபாடு என்னும் வித்தியாசமான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

காலை 8 மணிக்கு காலத்தால் அழியாத, நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற சிறப்பு அமுத கானம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

காலை 9 மணிக்கு எதிர்கால திரைப்பட கனவுகளுடன் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த உதவி இயக்கனர்களுடன் கலந்துரையாடுகிறார் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம்.

காலை 10 மணிக்கு ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் தத்தை மஞ்சி கிராமத்தில் கிராம மக்களுடன் சேர்ந்து ஆனந்தமாய் கொண்டாடும் நட்சத்திர பொங்கல் விழா.

பிற்பகல் 2 மணிக்கு தினம் தினம் தீபாவளி நகைச்சுவை தொடரின் நட்சத்திரங்கள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பொங்கல் அன்று தீபாவளி என்னும் சிறப்பு நிகழ்ச்சி.

மாலை 4 மணிக்கு திரைப்பட நாயகன் ஸ்ரீகாந்த் உடன் சந்திப்பு. இதில் தனது சினிமா முதல் த்ரில்லான திருமண வாழ்க்கை வரை மனம் திறந்து பேட்டி அளிக்க உள்ளார்.

மாலை 4.30 மணிக்கு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்களின் ஜொலிக்கும் காட்சிகள்.

மாலை 5.30 மணிக்கு நடன இயக்குனர் காதல் கந்தாஸ் உடன் ஒரு சுவையான சந்திப்பு.

மாலை 6-30 மணிக்கு பிடிச்சிருக்கு திரைப்படக் குழுவினர் தங்களுக்கு பிடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பிடிச்சிருக்கு நிகழ்ச்சி.

இரவு 7.30 மணிக்கு புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி பங்கேற்கும் சிறப்பு அதிசய ராகம். இதில் கிராமிய, குத்துப் பாடல்கள் குறித்து தங்கள் அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இரவு 8.30 மணிக்கு இயக்குனர் சீமானுடன் உயிரோட்டமான சந்திப்பு. சீமான், தனது திரைப்பட அனுபவங்களை எடுத்துரைக்கும் வாழ்த்துக்களுடன் சீமான் நிகழ்ச்சி.

ஜனவரி 16:

காலை 6.30 மணிக்கு மாட்டு பொங்கலை முன்னிட்டு ஒளிபரப்பாகும் கோமாதா எங்கள் குலமாதா திரைப்படம்

காலை 9.30 மணிக்கு தர்மயுத்தம் தொடர் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் பொங்கல் ஸ்பெஷல் ஷோவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களின் அனுபவங்களை மனம் திறந்து சொல்கிறார்கள்.

பிற்பகல் 12 மணிக்கு டிஜிட்டல் அனிமேசன் மூலம் திரைப்படங்களில் புகுந்து விளையாடும் தொழில்நுட்பம் பற்றி அனிமேட்டர் மூர்த்தி பங்குபெறும் திரை ஜாலங்கள். திரைப்படங்களில் செய்யப்படும் அனிமேசன் யுக்திகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி.

பிற்பகல் 1 மணிக்கு ஜித்தன் ரமேஷூடன் சிறப்பு பேட்டி.

பிற்பகல் 2 மணிக்கு விஜய் டிவி கிராண்ட் மாஸ்டர் நாயகன் ஜி.எஸ்.பிரதீப் பங்கு வழங்கும் உற்சாகமான அறிவுப் போட்டி சிறப்பு பஞ்ச தந்திரம்.

பிற்பகல் 3.30 மணிக்கு இசையமைப்பாளர் விஜய் அந்தோணியின் இசைப்பயணம். இசையமைப்பாளராக அவதரித்தது எப்படி என கலந்துரையாடுகிறார்.

மாலை 4-30 மணிக்கு பொங்கல் ரிலீஸ் திரைப்படங்களின் பாடல் காட்சிகள்.

இரவு 8.30 மணிக்கு திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வழங்கும் பீம் பீம் பீமா. பீமா படம் வளர்ந்த விதம் குறித்து மனம் திறந்து உரையாடுகிறார் லிங்குசாமி.

ஜனவரி 17:

மாலை 5.30 மணிக்கு முன்னாள் முதல்வரும், மறைந்த திரைப்பட நாயகருமான எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தையொட்டி ஒளிபரப்பாகும் காவியத்தலைவன் சிறப்பு நிகழ்ச்சி

மாலை 6.30 மணிக்கு ஆதிவாசியும் அதிசயப் பேசியும் பட நாயகன், நகைச்சுவை நடிகர் செந்திலுடன் ஓர் சுவையான சந்திப்பு. கதாநாயகனாக நடித்த அனுபவம் குறித்து கலந்துரையாடுகிறார் செந்தில்.

இரவு 7.30 மணிக்கு கர்நாடக சங்கீதமும், திரைப்பட பாடல்களும் பிண்ணிப் பிணைந்து உறவு கொண்டாடுவதை உணர்த்தும் நிகழ்ச்சி ச..ரி..க..ம..

இரவு 8.30 மணிக்கு பொங்கல் கொண்டாட்டங்களுக்கு இடையே தம்பதிகள் குடும்பத்துடன் குதூகலிக்கும் விளையாட்டு நிகழ்ச்சியான நீ பாதி நான் பாதி.

இது தவிர பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் 3 நாட்களிலும், இரவு 9 மணிக்கு பொங்கல் சிறப்பு மெகா லைவ் ஷோ என்னும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மற்ற தனியார் தொலைக்காட்சிகளுடன் மெகா டிவியும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil