»   »  விஜய் டிவியின் பொங்கல் ஸ்பெஷல்

விஜய் டிவியின் பொங்கல் ஸ்பெஷல்

Subscribe to Oneindia Tamil
Vijay Pongal Specials
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று விஜய் டிவி பல சிறப்பு நிகழ்ச்சிகளுடன் தமிழ் மக்களுக்கு விருந்து படைக்க வருகிறது.

ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இருநாட்களும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புகிறது.

ஜனவரி 15:

காலை 8 மணிக்கு கலக்கல் மன்றம் - சேது, ஜீவா, படவா கோபி ஆகியோர் பங்கேற்கும் இந்த கலக்கல் கலகலப்பு பட்டிமன்றம் முழு நீள காமெடி வெடிகளுடன் வயிறுகளைப் பதம் பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

காலை 9 மணிக்கு இதயம் மந்த்ரா காபி வித் அனு - பிரபு தேவா, சங்கீதா ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு காபி வித் அனு ரசிகர்களை நிச்சயம் கவரும். பிரபுதேவா குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும், முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியும் பாராட்டிப் பேசுகிறார்கள்.

காலை 10 மணிக்கு பயமறியா பீமா - சீயான் விக்ரம் தனது பீமா பட அனுபவத்தை விவரித்துப் பேசுகிறார்.

காலை 11 மணிக்கு டிவிஎஸ் ஸ்கூட்டி திரிஷாவுடன் ஒரு பெப்பி பயணம் - தான் படித்த பள்ளி, கல்லூரிக்கு விசிட் அடிக்கிறார் திரிஷா. தன்னுடன் படித்த பழைய தோழிகளை சந்தித்து உரையாடுகிறார்.

பிற்பகல் 12 மணிக்கு ஜோடிப் பொங்கல் - விஜய் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜோடிகளின் கலகலப்பு பொங்கல் கொண்டாட்டம்.

தொடர்ந்து முதல்வன் ஷங்கர் - ஷங்கருடன் ஒரு சந்திப்பு. காதலன், ஜென்டில்மென், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி உள்ளிட்ட தனது பட அனுபவங்களை விவரிக்கிறார் ஷங்கர்.

பிற்பகல் 2 மணிக்கு இன்டிபென்டன்ஸ் டே - அதிரடி திரைப்படம் - தமிழில்.

மாலை 5 மணிக்கு பழனி சிறப்பு விமர்சனம் - பொங்கலுக்குத் திரைக்கு வரும் பழனி திரைப்படம் குறித்த சிறப்பு கண்ணோட்டம்.

மாலை 5.30 மணிக்கு சிம்புவின் காளை படம் குறித்த சிறப்பு கண்ணோட்டம்.

ஜனவரி 16:

காலை 8 மணிக்கு லியோனியின் சிரிப்பு பட்டிமன்றம் - வயிறு வெடிக்க சிரிக்க வைக்கும், சிறப்பு சிரிப்புப் பட்டிமன்றம். தலைப்பு - தமிழர்கள் தமிழ்ப் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கிறார்களா, இல்லையா?.

காலை 9 மணிக்கு ஜெயம் ரவியின் பொங்கல் - முட்டுக்காடு கிராமத்தில் ஜெயம் ரவி கொண்டாடும் கிராமத்து பொங்கல்.

காலை 10 மணிக்கு லொள்ளு 200 - லொள்ளு சபா குழுவினர் தங்களது நிகழ்ச்சியின் 200வது எபிசோடை குதூகலத்துடன் கொண்டாடுகின்றனர்.

காலை 11 மணிக்கு கதையின் நாயகன் சேரன் - இயக்குநர், நடிகர் சேரன் திரைப்படங்களில் பங்கேற்கும் நிழல் கேரக்டர்களின் பின்னணியில் உள்ள நிஜ கேரக்டர்களை சந்திக்கிறார்.

பிற்பகல் 12 மணிக்கு யாரடி நீ மோகினி ஆடியோ ரிலீஸ் - யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள யாரடி நீ மோகினி படத்தின் பாடல் வெளியீட்டு விழா.

பிற்பகல் 2 மணிக்கு ஆச்சி ஜோடி நம்பர் ஒன் லைவ் - சீசன்1 மற்றும் சீசன் 2 ஜோடிகள் பங்கேற்கும் அட்டகாச நடன நிகழ்ச்சி என கலக்கவுள்ளது விஜய் டிவி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil