twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வந்தாச்சு பொங்கல்... அந்த பாட்ட போடுங்கடா... எல்லாரும் ரெடியா ?

    |

    சென்னை : எந்த பண்டிகை பிறந்தாலும் அதில் திரைப்படங்களுக்கு பெரும் பங்கு உண்டு. அது தீபாவளி என்றாலும் சரி பொங்கல் ஆனாலும் சரி..

    மனது நிறைய மகிழ்ச்சியுடன்... இதழ்விரித்த புன்னகையுடன் பாண்டிகையை கொண்டாடும் போதும் கூடவே, ஆட்டமும் பாட்டமும் சேர்ந்து கொள்ளும்.

    அப்படி பொங்கலுக்கு ஆண்டு தோறும் ஆட்டம் போடவைத்த திரைப்பட பாடல் பற்றித்தான் இப்போ நாம் பார்க்கப்போகிறோம்.

    பொங்கல் ரேஸில் களமிறங்கிய நான்கு திரைப்படங்கள் என்னென்ன? ஒரு குட்டி ரவுண்ட் அப் பொங்கல் ரேஸில் களமிறங்கிய நான்கு திரைப்படங்கள் என்னென்ன? ஒரு குட்டி ரவுண்ட் அப்

    தை திருநாள்

    தை திருநாள்

    தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

    உலகம் முழுவதும்

    உலகம் முழுவதும்

    வேளாண்மை தொழில் நிறைந்துள்ள தமிழகத்தில் பொங்கல் திருவிழா தனித்தன்மையாகவே கருதப்படுகிறது. மேலும், தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    புதுபானையில்

    புதுபானையில்

    இந்த திருநாளில், மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து சூரிய பகவானுக்கு வணக்கம் செலுத்துவிட்டு வாழைப்பழம், வெற்றிலை, அவல் பொரி, கற்கண்டு, கரும்பு, மஞ்சள் போன்றவைகளை இலையில் வைத்து சூரியனுக்குப் படையல் வைக்கின்றனர். புது பானையில் பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடுகின்றனர்.

    குக்கர் பொங்கல்

    குக்கர் பொங்கல்

    கிராமத்தில் பிறந்துவளர்ந்த பலர் பொங்கலின் மகிழ்ச்சியை நிச்சயம் அனுபவித்து இருப்பார்கள். ஆனால், நகரத்தில் பிறந்த இளசுகளுக்கு குக்கர் பொங்கலும்... தொலைக்காட்சியில் ஸ்பெஷல் சினிமாவும் தான் தெரியும்...

    பொங்கல் ஸ்பெஷல் சாங்

    பொங்கலு வந்துடுச்சிடோய்... அந்த பாடலை போடுங்க என்று நீங்க சொல்லுவது காதில் கேட்கிறது. ஆமாங்கா அதே பாட்டுத்தான்...மகாநதி திரைப்படத்தில் இடம் பெற்ற "தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ" பாட்டுத்தான், பொங்கலுக்கு இந்த பாட்டு இல்லாமே இருக்குமா என்ன? இந்த பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆனாலும், தொலைக்காட்சி பொங்கல் ப்ரோமோவிலும், பிஜிஎம்பிலும் பிரதான இடத்தை இந்த பாடல் பிடித்து விடும். இன்னும் எத்தனை பொங்கல் வந்தாலும் ...இந்த பாடல் தான் பொங்கல் ஸ்பெஷல் சாங்...!

    English summary
    Pongal festival Special song, பொங்கல் பண்டிகை பாடல், மகாநதி பாடல்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X