»   »  பொங்கல் ரிலீஸ் படங்கள்!

பொங்கல் ரிலீஸ் படங்கள்!

Subscribe to Oneindia Tamil
Cheran with Sneha

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது விக்ரமின் பீமா முக்கியப் படமாக வெளியாகிறது. சேரன், தனுஷ், ஜெயம் ரவி, பரத், மாதவன் ஆகியோரது படங்களும் பீமாவுடன் மோதவுள்ளன.

முதல் படமாக பீமா ஜனவரி 11ம் தேதி ரிலீஸாகிறது. கோலிவுட்டைப் பொருத்தவரை பொங்கல் பண்டிகைதான் ரிலீஸுக்கு உகந்த திருவிழா. குறைந்தபட்சம் நான்கு நாட்கள் (இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரு வார விடுமுறை வருகிறது) அப்போது விடுமுறைக் காலமாக இருக்கும் என்பதால் கோலிவுட்டில், பொங்கல் ரிலீஸை அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.

இந்தப் பொங்கலுக்கு பீமா தவிர சேரனின் பிரிவோம் சந்திப்போம், சிம்புவின் காளை, மாதவனின் வாழ்த்துகள், மிஸ்கின் இயக்கிய அஞ்சாதே, பரத்தின் பழனி, மறைந்த ஜீவா இயக்கிய தாம்தூம், பிரகாஷ் ராஜின் வெள்ளித்திரை, தனுஷின் யாரடி நீ மோகினி, வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.

இவற்றில் பிரிவோம் சந்திப்போம், காளை, வாழ்த்துகள், பழனி ஆகிய படங்களுக்கு தியேட்டர்களும் கிடைத்து விட்டன.

மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டதாம். ஆனால், அதையெல்லாம் தாண்டி தியேட்டர்கள் கிடைத்து வருகின்றன.

இன்னும் ஓரிரு நாட்களில் எந்தப் படம் எந்தத் தியேட்டர்களில் ஓடப் போகிறது என்பது தெளிவாகத் தெரிய வரும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil