twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிவிகளின் பொங்கல் போட்டி பொங்கல் பண்டிகையை பொது மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்களோ, ஆனால் தமிழக தொலைக் காட்சிகள் அத்தனையும்ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுடன் மக்களை வீட்டோடு கட்டிப் போடப் போகின்றன.தீபாவளி, பொங்கல் என எந்தப் பண்டிகை வந்தாலும், அதை விமரிசையாக கொண்டாடி விடுவது (ஏகப்பட்ட விளம்பரங்கள்மூலம் நல்ல துட்டு சம்பாதிப்பது) டிவிக்களின் வழக்கமாகி விட்டது.இது மாதிரியான நேரங்களில் எந்த சேனலைத் திருப்பினாலும், ஏதாவது ஒரு சினிமா அடிப்படையிலான நிகழ்ச்சியைக்காணலாம் அல்லது சாலமன் பாப்பையாவும், கு. ஞானசம்பந்தனும், திண்டுக்கல் லியோனியும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்பார்கள்.இந்தப் பொங்கலும் அதற்கு விதி விலக்கல்ல. வழக்கம்போல நிறைய நிகழ்ச்சிகளுடன் தொலைக் காட்சிகள் தயாராகியுள்ளன.நிறைய சேனல்கள் இருந்தாலும் சன், ஜெயா டிவிகளுக்கிடையேதான் நிகழ்ச்சிகளை பெட்டராக தருவது யார் என்ற போட்டிகடுமையாக இருக்கும்.இந்த ஆண்டும் இரண்டு டிவிகளும் வெயிட்டான நிகழ்ச்சிகளுடன் பொங்கலைத் தடபுடலாக கொண்டாடப்போகின்றன.சன் டிவி 2 நாட்கள் பொங்கலைக் கொண்டாடுகிறது. விஜய், பரத், சரத்குமார், வடிவேலு, அர்ஜூன், ஜெயம் ரவி, நடிகைகள் மீராஜாஸ்மின், த்ரிஷா ஆகியோரின் பேட்டிகள் இடம் பெறுகின்றன. உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக இரண்டுபடங்களையும் திரையிடுகிறது. அஜீத்தின் வில்லன், விக்ரமின் தூள்தான் அவை.ஜெயா டிவி மட்டும் சளைத்ததா என்ன? லேட்டஸ்டாக வந்த கஸ்தூரி மான் படம் ஜெயாவில் ஒளிபரப்பாகவுள்ளது. அத்தோடுஅஜீத்தின் அட்டகாசம் படமும் ஜெயாவில் ரிலீஸ் ஆகிறது.சன்னுடன் ஒப்பிடுகையில் ஜெயாதான் அதிக நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளது. வெள்ளிக்கிழமையிலிருந்தே ஜெயா டிவி தனதுபொங்கல் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டது.ராஜ் டிவி, விஜய், பொதிகை என மற்ற டிவிகளும் ஏராளமான நிகழ்ச்சிகளுடன் காத்துள்ளன. எல்லா டிவிகளிலும் பட்டிமன்றம்இடம்பெறுகிறது. சன்னில் சாலமன் பாப்பையாவும், ஜெயாவில் கு.ஞானசம்பந்தனும், விஜய்யில் திண்டுக்கல் லியோனியும்பட்டிமன்றம் நடத்துகிறார்கள்.பொதிகையும் பட்டிமன்றம் நடத்துகிறது. வழக்கமாக மற்ற எல்லா சானல்களையும் விட விஜய் டிவியில் கொஞ்சம்அறிவுப்பூர்வமாகவும், அர்த்தம் தொனிக்கும் வகையிலும் நல்ல நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்தப் பொங்கலிலும் அதுதொடருகிறது.தமிழனே பொங்குக என்ற தலைப்பில் விவசாயிகளைக் கொண்ட புதுமையான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பெரியார் தாசன்தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதுதவிர சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் ஏகத்துக்கும் உண்டு.ரிமோர் ஒரு கையில், கரும்பு மறு கையில் என அனுபவிக்கப் போகிறது பொது ஜனம்.

    By Staff
    |

    பொங்கல் பண்டிகையை பொது மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்களோ, ஆனால் தமிழக தொலைக் காட்சிகள் அத்தனையும்ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுடன் மக்களை வீட்டோடு கட்டிப் போடப் போகின்றன.

    தீபாவளி, பொங்கல் என எந்தப் பண்டிகை வந்தாலும், அதை விமரிசையாக கொண்டாடி விடுவது (ஏகப்பட்ட விளம்பரங்கள்மூலம் நல்ல துட்டு சம்பாதிப்பது) டிவிக்களின் வழக்கமாகி விட்டது.


    இது மாதிரியான நேரங்களில் எந்த சேனலைத் திருப்பினாலும், ஏதாவது ஒரு சினிமா அடிப்படையிலான நிகழ்ச்சியைக்காணலாம் அல்லது சாலமன் பாப்பையாவும், கு. ஞானசம்பந்தனும், திண்டுக்கல் லியோனியும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்பார்கள்.

    இந்தப் பொங்கலும் அதற்கு விதி விலக்கல்ல. வழக்கம்போல நிறைய நிகழ்ச்சிகளுடன் தொலைக் காட்சிகள் தயாராகியுள்ளன.நிறைய சேனல்கள் இருந்தாலும் சன், ஜெயா டிவிகளுக்கிடையேதான் நிகழ்ச்சிகளை பெட்டராக தருவது யார் என்ற போட்டிகடுமையாக இருக்கும்.


    இந்த ஆண்டும் இரண்டு டிவிகளும் வெயிட்டான நிகழ்ச்சிகளுடன் பொங்கலைத் தடபுடலாக கொண்டாடப்போகின்றன.

    சன் டிவி 2 நாட்கள் பொங்கலைக் கொண்டாடுகிறது. விஜய், பரத், சரத்குமார், வடிவேலு, அர்ஜூன், ஜெயம் ரவி, நடிகைகள் மீராஜாஸ்மின், த்ரிஷா ஆகியோரின் பேட்டிகள் இடம் பெறுகின்றன. உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக இரண்டுபடங்களையும் திரையிடுகிறது. அஜீத்தின் வில்லன், விக்ரமின் தூள்தான் அவை.


    ஜெயா டிவி மட்டும் சளைத்ததா என்ன? லேட்டஸ்டாக வந்த கஸ்தூரி மான் படம் ஜெயாவில் ஒளிபரப்பாகவுள்ளது. அத்தோடுஅஜீத்தின் அட்டகாசம் படமும் ஜெயாவில் ரிலீஸ் ஆகிறது.

    சன்னுடன் ஒப்பிடுகையில் ஜெயாதான் அதிக நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளது. வெள்ளிக்கிழமையிலிருந்தே ஜெயா டிவி தனதுபொங்கல் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டது.

    ராஜ் டிவி, விஜய், பொதிகை என மற்ற டிவிகளும் ஏராளமான நிகழ்ச்சிகளுடன் காத்துள்ளன. எல்லா டிவிகளிலும் பட்டிமன்றம்இடம்பெறுகிறது. சன்னில் சாலமன் பாப்பையாவும், ஜெயாவில் கு.ஞானசம்பந்தனும், விஜய்யில் திண்டுக்கல் லியோனியும்பட்டிமன்றம் நடத்துகிறார்கள்.


    பொதிகையும் பட்டிமன்றம் நடத்துகிறது. வழக்கமாக மற்ற எல்லா சானல்களையும் விட விஜய் டிவியில் கொஞ்சம்அறிவுப்பூர்வமாகவும், அர்த்தம் தொனிக்கும் வகையிலும் நல்ல நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்தப் பொங்கலிலும் அதுதொடருகிறது.

    தமிழனே பொங்குக என்ற தலைப்பில் விவசாயிகளைக் கொண்ட புதுமையான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பெரியார் தாசன்தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதுதவிர சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் ஏகத்துக்கும் உண்டு.

    ரிமோர் ஒரு கையில், கரும்பு மறு கையில் என அனுபவிக்கப் போகிறது பொது ஜனம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X