»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

விருமாண்டி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், எங்கள் அண்ணா, கோவில், ஜெய் என பொங்கல் படங்கள் வரிந்து கட்டிநிற்கின்றன

இந்தப் படங்கள் குறித்து ஒரு பார்வை

விருமாண்டி-

கமல்ஹாசன், அபிராமி, ரோகினி, நாசர், நெப்போலியன், பசுபதி

இசை: இளையராஜா

இயக்கம்: கமல்ஹாசன்

விறு விறு மாண்டி, விருமாண்டி!...

தமிழகமெங்கும் இப்போது எதிரொலித்துக் கொண்டிருப்பது இந்தப் பாட்டுத்தேன். இளையராஜாவின் அதிரடிஇசையால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரண்டு மடங்காகிவிட்டது. கமலே நடித்து, எழுதி, இயக்கியுள்ளபடம் என்பதாலும், ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் வரும் படம் என்பதாலும் பொங்கல் ரிலீசில் பெரும்ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படம் விருமாண்டி தான்.

கமலின் மார்க்கெட்டை உயரப் போய் நிறுத்தும் விதத்தில் படம் அமைந்திருப்பதாக கோடம்பாக்கம் பண்டிதர்கள்கூறுகிறார்கள். படத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருப்பதாகவும், ஒரு சிலரால் விமர்சிக்கப்பட்டது போலசர்ச்சைக்குரிய விவகாரங்கள் மிகக் குறைவே என்கிறார்கள்.

படத்தில் கமலின் நடிப்புக்கு இணையாக நெப்போலியன், ரோகினி, நாசர், பசுபதி ஆகியோரின் நடிப்பும்பேசப்படுமாம். இரண்டு முரட்டுக் காளைகளும் இந்தப் படத்தில் அசத்தியுள்ளன.

நாடக நடிகராக, துணை சினிமா நடிகராக மட்டுமே அறியப்பட்ட பெரிய கருப்பத் தேவரை அவரது கட்டைகுரலால் பாட வைத்து மிரட்டியிருக்கிறார் இளையராஜா. ராஜாவுக்கும் இந்தப் படம் மாபெரும் பிரேக்என்கிறார்கள்.

பொங்கல் ரிலீஸ் படங்களில் முதலில் சென்சார் ஆனது விருமாண்டிதானாம், அதுவும் எந்தவித கட்டும்இல்லாமல்.

எங்கள் அண்ணா-

விஜயகாந்த், நமிதா நாயர், பிரபுதேவா, சொர்ணமால்யா, பாண்டியராஜன்

இசை: தேவா

இயக்கம்: சித்திக்

பாதாள சாக்கடைக் குழாய்க்குள் புகுந்து கொண்டு, எதிரிகளை துவம்சம் செய்து விட்டு, அயர்ன் பண்ணி போட்டகோட் சூட் கசங்காமல், அப்படியே அலேக்காக வெளி வந்து கண்களை அங்குமிங்கும் உருட்டியவாறு, ஒருபுன்னகை பூப்பது போன்ற படங்களில் நடிப்பதை குறைக்கும் முதல் முயற்சியாக, விஜய்காந்த் நடித்திருக்கும் படம்எங்க அண்ணா.

காமெடி பிளஸ் குடும்பக் கதையாம்.

விஜயகாந்த் படத்தின் கட்டாயங்களான சண்டைக் காட்சிகள் இதிலும் உள்ளன. ஆனாலும் படத்தின் கதைக்குபங்கம் வராமல் சண்டை போட்டுள்ளார்களாம்.

விஜயகாந்த்தின் ஜோடியாக மலையாளத்து மல்லிகை நமீதா சேர்ந்திருக்கிறார். டைரக்டரும் மலையாளியே.இன்னொரு ஜோடி பிரபுவோ மற்றும் சொர்ணமால்யா. கார்த்திக் நடிப்பதாக இருந்த வேடத்தில் பிரபுதேவாநடித்துள்ளார், காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

படத்தில் மென்மையான காதலும், காமடியும் சரிபாதியாக கலந்து படத்தை மென்மையாக்கியுள்ளதாம். குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கும்படி இருக்கும் என்று கையில் அடித்துச் சத்தியம் செய்கிறார் டைரக்டர் சித்திக்.

படத்தை தயாரித்திருப்பதும் விஜய்காந்த் தான்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன்-

தனுஷ், அபர்ணா, தாரிகா

இசை: யுவன் ஷங்கர் ராஜா

இயக்கம்: ஸ்டேன்லி

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு சரவணன் ... ஸாரி....தனுஷ் நடித்துள்ள படம். ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகள். தனுஷ் நடிப்பதால் மட்டுமல்ல, படத்தில் பரவிக் கிடக்கும்எக்கச்சக்க கவர்ச்சிக் காட்சிகளுக்காகவும்தான்.

நாயகி அபர்ணா சின்ன வயசு பொண்ணு. கவர்ச்சியில் கரகாட்டமே ஆடியிருக்கிறார். அவருடன் நாயகன்தனுஷும் பல காட்சிகளில் சட்டையைக் கடாசி விட்டு, பேர் பாடியுடன் புகுந்து விளையாடியிருக்கிறார்.

படத்தில் நல்ல கதையும் உள்ளது என்கிறார்கள். ஒரு அப்பாவி கிராமத்து இளைஞன் வெளிநாடுகளில் போய்படும்பாடு தான் கதையாம். அந்த சுற்றுதலின்போது அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் கதையின் கருவாம்.நன்றாகவே நடித்துள்ளார் தனுஷ் என்கிறார்கள்.

படத்தின் இன்னொரு பிளஸ் பாயிண்டாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. பாட்டுக்கள் எல்லாம இப்போதே ஹிட்ஆகியுள்ளன. பொங்கல் ரிலீசில் அதிக கேசட்டுகள் விற்றுள்ளது இந்தப் படத்துக்குத் தான்.

அபர்ணாவின் கவர்ச்சியுடன், தாரிகாவையும் இறக்கிவிட்டு கவர்ச்சி பேயாட்டம் போட விட்டுள்ளார்கள்.படத்தைப் பார்த்து விட்டு வருபவர்களுக்கு துள்ளாத இளமையும் துள்ளும் என்கிறது கோலிவுட் பட்சி.

கோவில்-

சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம்: ஹரி

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று தன்னைத் தானே வர்ணித்துக் கொள்ளும் சிம்புவுக்கு இந்தப் படம் வாழ்வா, சாவா!படத்தை பொங்கலுக்கு 4 நாட்களுக்கு முன்பே ரிலீஸ் செய்துவிட்டார்கள்.

தம் கொடுத்த தெம்பில், அலை பாய நினைத்த சிம்புவுக்குக் கிடைத்த படுதோல்வி அவரை நிலை குலையவைத்துவிட்டது. அத்தோடு தனுசுக்கு கிடைத்து வரும் வெற்றிகளும் அவரை காணாமல் போகச் செய்து விடும்நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.

இந் நிலையில் கட்டை விரல், சுண்டு விரல், ஆள்காட்டி விரல், நடு விரல் என ஒரு விரலையும் ஆட்டாமல்,அசைக்காமல், மடக்காமல், முடக்காமல் அமைதியாக சிம்பு நடித்துள்ள படம் கோவில். படத்தின் டைரக்டரும்பெரிய ஆள்தான், சாமியைக் கொடுத்த ஹரி.

எந்த விரலாட்டமும் கூடாது, ஓவர் ஆக்ட் கூடாது, சும்மா ஓவர் வசனம் எல்லாம் வைக்க மாட்டேன் என்றுபள்ளிக்கூட ஆசிரியர் மாதிரி ரூல் போட்டு சிம்புவை அடக்கி, நடிக்க வைத்திருக்கிறார் ஹரி.

தனக்கு ஒரு வெற்றி வேண்டும் என்ற நிலையில் இருக்கும் சிம்புவும் ஹரியிடம் கையைக் கட்டி நின்று, நல்லபிள்ளையாய் முடித்துக் கொடுத்திருக்கிறார். படத்தில் சோனியா அகர்வாலின் கவர்ச்சி பலம்.

வழக்கமான ஆக்ஷன் படமாக இருந்தாலும் திரைக் கதையை அமைத்துள்ள விதத்தால் டிக்கெட் வாங்கிவந்தவர்களை தியேட்டரில் உட்கார வைக்கிறார் ஹரி. சிம்புவும் நன்றாகவே நடித்துள்ளார். கூடுதலாகசோனியாவின் ஆர்ப்பாட்டமில்லாத அழகு. படம் தேறி விடும் என்கிறார்கள்.

பாய்ஸ் படத்தினால் தனக்குக் கிடைத்த வசவுகளுக்கு இந்தப் படத்தின் வெற்றி மூலம் ஆறுதல் தேடிக் கொள்ளக்காத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

ஜெய்-

பிரசாந்த், அன்ஷி, ராஜ்கிரண், பானுப்பியா, சீதா

இசை: மணி சர்மா

இயக்கம்: நாராயண்

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் ஒரு முயற்சி எடுத்துள்ளார் பிரசாந்த்.நல்ல படங்களாக நடித்தாலும், படங்கள் ஓடினாலும், ஒரு பிரேக் கூட கிடைக்காமல் பல வருடமாகசினிமாவில்காலம் தள்ளிக் கொண்டிருப்பவர் பிரசாந்த்தாகத்தான் இருக்கக் கூடும்.

இந்தப் படத்தில் மிகவும் மெனக்கெட்டு நடித்திருக்கிறாராம் பிரசாந்த் (தயாரிப்பு அப்பா தியாகராஜனாச்சே).

வெளிநாட்டு சண்டைக் காரர்களை கூப்பிட்டு சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். பல மாடல்அழகிகளுடன் அட்டகாசமாக ஆடி அசத்தியிருக்கிறார் பிரசாந்த். சிம்ரனுடனும் ஒரு பாட்டு உண்டு.

படத்திற்காக மிகக் கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் பிரசாந்த். அவருக்கு ஜோடியாக நடிப்பதுஅன்ஷு அம்பாடி. காதல், ஆக்ஷன், போராட்டம் என வித்தியாசமான கலவையுடன் ரசிகர்களைக் கவரும்வகையில் படம் அமைந்திருக்கும் என்கிறார்கள்.

பொங்கல் பண்டிகையைக் கலக்க வரும் முக்கியப் படங்கள் இவைதான்.

இதில் பொங்கலாய் இனிக்கப் போவது எதுவோ, போகியாகப் போவது எதுவோ.. இரு வாரங்களில்தெரிந்துவிடும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil