»   »  பூனைகள் இல்லாத வீடு!

பூனைகள் இல்லாத வீடு!

Subscribe to Oneindia Tamil
Chandra with Bharathiraja and Amir
பத்திரிக்கையாளரும், திரைப்பட பி.ஆர்.ஓவுமான வி.கே.சுந்தரின் மனைவியும், இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராகவும் உள்ள சந்திரா எழுதிய சிறுகதைத் தொகுப்பான பூனைகள் இல்லாத வீடு நூலை, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்.

அமீரின் ராம் மற்றும் பருத்தி வீரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சந்திரா. மீடியாவில் இருந்து வந்தாலும் கூட, அவரது தாகம் இலக்கியம்தான். வி.கே.சுந்தரின் ஒத்துழைப்புடன் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார் சந்திரா.

தற்போது தனது சிறுகதைகளைத் தொகுத்து பூனைகள் இல்லாத வீடு என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.

இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கரு. பழனியப்பன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சாருநிவேதிதா பேசுகையில், தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு நூலை இப்போதுதான் படிக்கிறேன். சந்திராவின் எழுத்து பாணி சிறப்பாக உள்ளதாக பாராட்டினார்.

தனது உயிர்மை பதிப்பகம் சார்பில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

காலச்சுவடு அறக்கட்டளை, புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்திய பெண்களுக்கான எழுத்துப் போட்டியில் சந்திராவுக்கு 2வது பரிசு கிடைத்தது. இந்த விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கோவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த விழாவில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil