»   »  இந்தி போக்கிரியில் ஷகீரா!!

இந்தி போக்கிரியில் ஷகீரா!!

Subscribe to Oneindia Tamil


சர்வலோக சுந்தரி ஷகீரா, இந்தி போக்கிரி படத்தில் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட வருகிறார்.

தமிழைக் கலக்கிய போக்கிரி தற்போது இந்தியிலும் பின்னிப் பெடலெடுக்கப் போயுள்ளது. தமிழில் இயக்கிய பிரபு தேவாவே இந்தியிலும் இயக்குகிறார். சல்மான் கான் விஜய் வேடத்தில் நடிக்கிறார். ஆசின் நடித்த வேடத்தில் ஆயிஷா டாக்கியா, போட்டுத் தாக்குகிறார். படு சுறுசுறுப்பாக படப்பிடிப்பு போய்க் கொண்டுள்ளது.

தமிழ் போக்கிரியில் முமைத்கானின் மயக்கும் குத்தாட்டம் இடம் பெற்றிருந்தது. அதே போல இந்தியிலும் ஒரு இன்னிசை குத்தைப் போட விரும்பிய பிரபுதேவா, யாரை விட்டு ஆட வைக்கலாம் என யோசித்தபோது ஷகீரா பெயர் அவர் யோசனையில் சிக்கியது.

சர்வதேச பாப் பாடகியான ஷகீரா, பாட்டுக்கு மட்டுமல்லாது கவர்ச்சியான ஆட்டத்திற்கும் பெயர் போனவர். தற்போது அவரையே குத்துப் பாட்டுக்கு ஃபிக்ஸ் செய்து விட்டார்கள்.

இந்த வாய்ப்பு குறித்து ஷகீரா சந்தோஷமாக உள்ளாராம். பிரபு தேவா குறித்து கேள்விப்பட்டுள்ள அவர், ஒரு டான்ஸ் ராஜாவின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தான் ஆடவிருப்பது பெருமையான விஷயம் என்று கூறியுள்ளாராம்.

படத்தைத் தயாரித்து வரும் நம்ம ஊர் ஸ்ரீதேவியின் கணவர் போணி கபூர் கூறுகையில், ஷகீராவின் மேனேஜரிடம் கால்ஷீட் கேட்டு அணுகியபோது, இருக்குமோ, இல்லையோ என்று சந்தேகமாக கூறினார். ஆனால் ஷகீராவே எங்களைத் தொடர்பு கொண்டு ஆட ஒத்துக் கொண்டபோது சந்தோஷமாகி விட்டது என்றார்.

அப்ப, ரசிகர்களுக்கு டோலு டோலுதான்!

Read more about: hindi, pokkiri, shakira
Please Wait while comments are loading...