»   »  சென்னையில் பாட்டர் அலை!!

சென்னையில் பாட்டர் அலை!!

Subscribe to Oneindia Tamil

உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் ஹாரி பாட்டர் அலை சென்னைக்கும் வந்து விட்டது.

சூப்பர் மேன், ஜாக்கி சான் வரிசையில் உலகெங்கும் பெருமளவில் ரசிகர்களைக் கொண்ட கேரக்டராக ஹாரி பாட்டர் உருவெடுத்துள்ளது.

ஹாரி பாட்டர் நூலின் வாசகர்கள் அனைவரும் ஹாரி பாட்டர் படங்களின் ரசிகர்களாகவும் மாறியுள்ளனர். ஒவ்வொரு முறை ஹாரி பாட்டர் நூல்கள் வெளியாகும்போதெல்லாம் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவிலான எதிர்பார்ப்பு பாட்டர் வரிசைப் படங்களுக்கும் இருக்கிறது.

அந்த வரிசையில், ஹாரி பாட்டர் நூலை அடிப்படையாகக் கொண்ட ஐந்தாவது படம் நாளை இந்தியாவில் ரிலீஸாகிறது. ஹாரி பாட்டர் அண்ட் தி ஆர்டர் ஆப் தி பீனிக்ஸ் என்ற ஹாரி பாட்டரின் 5வது பாகம் நாளை திரைக்கு வருகிறது.

இந்தப் படத்திற்கு இந்தியாவில் உள்ள பாட்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என பிராந்திய மொழிகளிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் மட்டும் 53 பிரிண்டுகள் போட்டுள்ளனராம். இந்தியாவில் மொத்தம் 250 பிரிண்டுகள் போட்டு அனுப்பியுள்ளனராம்.

சென்னையில் ஹாரி பாட்டர் அலை படு வேகமாக அடித்துக் கொண்டிருக்கிறது. சிவாஜி படத்துக்கு இருந்தது போன்ற எதிர்பார்ப்பு ஹாரி பாட்டரின் இந்த ஐந்தாம் பாகத்துக்கு ஏற்பட்டுள்ளது என்று கூட சொல்லலாம்.

ஆண்களை விட இளம் பெண்களைத்தான் இந்தப் படம் அதிகம் ஈர்த்துள்ளது. தியேட்டர்களில் முன்பதிவு செய்யக் காத்திருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் இது புலனாகும்.

சென்னையில் முக்கியத் திரையரங்குகளான ஐனாக்ஸ், சத்யம், சங்கம், தேவி, மாயாஜால் ஆகியவற்றில் ஹாரி பாட்டர் நாளை ரிலீஸாகிறது.

இந்தத் தியேட்டர்களின் முன்பதிவு ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்திற்குப் படம் புக் ஆகி விட்டதாம். குழந்தைகள் மட்டுமல்லாமல் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் பாட்டர் படங்கள் இருப்பதால்தான் இவ்வளவு வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil