»   »  பிரபுதேவா- நயனதாரா காதலுக்கு பார்வதி ஓமணக்குட்டன் 'பலே' ஆதரவு!

பிரபுதேவா- நயனதாரா காதலுக்கு பார்வதி ஓமணக்குட்டன் 'பலே' ஆதரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Parvathy Omanakuttan
கணவர் இன்னொரு பெண்ணுடன் காதல் கொள்வது மனைவிக்கு பிடிக்கவில்லை என்றால், பிரிந்து சென்றுவிட வேண்டியதுதானே. என்னைப் பொறுத்தவரை பிரபுதேவா- நயனதாரா காதலில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவுடனேயே சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மயிரிழையில் வாய்ப்பிழந்த பார்வதி ஓமணக்குட்டன்.

வந்தவர்களுக்கெல்லாம் வாய் பிளந்து வரவேற்பளிக்கும் தமிழ்த் திரையுலகம் இப்போது பார்வதிக்கும் பட்டுக் கம்பளம் விரித்து அவரது திரையுலகப் பிரவேசத்திற்கு வழி விட்டுள்ளது.

உமாமகேஸ்வரம் என்ற தமிழ் படத்தில் இவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். நிதின் ராமகிருஷ்ணா டைரக்ட் செய்கிறார். ரூபேஷ்குமார் தயாரிக்கிறார். படத்தின் தொடக்க விழா, சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது.

அதில் கலந்துகொண்ட பார்வதி ஓமணகுட்டன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரபுதேவா, நயனதாரா காதலில் எந்தத் தவறும் இல்லை. அது பிடிக்கவில்லையென்றால் பிரபுதேவாவின் மனைவி பிரிந்து போய் விட வேண்டியதுதானே என்று தடாலடியாக கூறினார்.

உங்கள் ஊரைச்சேர்ந்த நயன்தாரா, நடிகர்-டைரக்டர் பிரபுதேவாவை காதலிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

நான் நயன்தாராவை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். பிரபுதேவா பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இருவருக்கும் இடையே காதல் இருப்பது பற்றி பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன்.

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். திருமணம் ஆனவரா, திருமணம் ஆகாதவரா? என்று பார்த்துக்கொண்டு காதல் வருவதில்லை. அதனால் யாரையும் குறை சொல்ல முடியாது.

மனைவிக்கு பிடிக்கவில்லை என்றால், பிரிந்து சென்றுவிட வேண்டியதுதானே என்றார் பார்வதி.

தொடர்ந்து அவர் கூறுகையில், நான், கேரளாவில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவள். உலக அழகி போட்டியில் வெற்றி பெறாதது, எனக்கு வருத்தத்தை அளிக்கவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. கடவுள் ஒரு கதவை மூடினால், இன்னொரு கதவை திறப்பார். அப்படித்தான் எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்ததாக கருதுகிறேன்.

நான் முதன்முதலாக, யுனைடெட் 26 என்ற இந்தி படத்தில் நடித்தேன். சினிமாவில் நடித்தது, எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அதைத்தொடர்ந்து, உமா மகேஸ்வரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இந்த படத்தின் கதை எனக்கு பிடித்து இருந்தது. பெண்கள் பிரச்சினையை அடிப்படையாக கொண்ட கதை இது. இதில், நான் பரதநாட்டிய கலைஞராக நடிக்கிறேன். நான் அறிமுகமான இந்தி படத்தில், கவர்ச்சியாகத்தான் நடித்தேன்.

கதைக்கு அவசியம் என்றால், கவர்ச்சியாக நடிப்பதில் தப்பு இல்லை என்று கருதுகிறேன். முத்த காட்சியில் நடிப்பது, நீச்சல் உடையில் நடிப்பது ஆகியவைகளிலும் என் கருத்து இதுதான். கதைக்கு அவசியம் என்றால் முத்தம் கொடுத்து நடிப்பேன். அதேபோல் கதைக்கு தேவைப்பட்டால், நீச்சல் உடையில் நடிக்க தயங்க மாட்டேன்.

ஆனால், கவர்ச்சிக்கு ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையை தாண்டி போகமாட்டேன்.

தமிழ் பட உலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, விக்ரம், விஜய், சூர்யா என்று எனக்கு பிடித்தமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேர்களுடனும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார் பார்வதி.

இதுவரை பார்வதிக்கு பாய் பிரண்ட் என்று யாரும் இல்லையாம். நான் நட்பை நேசிப்பவள். நட்புக்கு மரியாதை கொடுப்பவள். என்றாலும், எனக்கு மிக குறைவான தோழிகளே இருக்கிறார்கள் என்கிறார் அவர்.

காதல் குறித்த கேள்விக்கு, எனக்கு காதல் அனுபவம் இல்லை. காதல் புனிதமானது என்று சொல்கிறார்கள். அது உண்மையா, பொய்யா? என்று எனக்கு தெரியாது என்றார்.

இப்பவே இவ்வளவு ஓப்பனாக பேசும் பார்வதி, இரண்டு படம் ஹிட் ஆகி விட்டால் படு ஹீட் ஆக பேசுவார் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil