»   »  நடனப்புயலுக்கு 43 வயசாச்சு பாஸ்

நடனப்புயலுக்கு 43 வயசாச்சு பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடனப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபுதேவா, இன்று தன்னுடைய 43வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் 1973 ம் ஆண்டு ஏப்ரல் 3 ம் தேதி பிரபுதேவா பிறந்தார். நடனம் மீது கொண்ட தீராத மோகத்தால் நடனத்தை முறைப்படி பயின்று சினிமாவில் டான்ஸராக அறிமுகமானார்.

இவருக்கு ராஜூ சுந்தரம், நாகேந்திர பிரசாத் என 2 சகோதர்கள் உள்ளனர். இதில் ராஜு சுந்தரம் நடன இயக்குநராகவும், நாகேந்திர பிரசாத் நடிகராகவும் திகழ்கின்றனர்.

நடன இயக்குநர்

நடன இயக்குநர்

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படும் பிரபுதேவா நடிகர், நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகங்கள் கொண்டவர். மவுன ராகம் படத்தில் இடம்பெற்ற 'பனிவிழும் இரவு' பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் டான்ஸராக பிரபுதேவா அறிமுகமானார்.

இந்து

இந்து

1994 ம் ஆண்டு வெளியான இந்து படத்தின் மூலம் நடிகராக பிரபுதேவாவுக்கு புரோமோஷன் கிடைத்தது. தொடர்ந்து காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் என்று 50க்கும் அதிகமான படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் பிரபுதேவா நடித்திருக்கிறார்.

2 தேசிய விருது

2 தேசிய விருது

நடன இயக்குநராக 2 தேசிய விருதுகளை பிரபுதேவா வென்றுள்ளார். 1997 ம் ஆண்டு 'மின்சார கனவு' படத்தில் இடம்பெற்ற 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' மற்றும் 2004 ம் ஆண்டு வெளியான 'லக்ஷயா'(இந்தி) படத்தில் இடம்பெற்ற 'மெயின் அயிஷா க்யு ஹூன்' ஆகிய பாடல்களுக்காக தேசிய விருதுகள் பிரபுதேவாவுக்கு கிடைத்தது.

இயக்குநர்

இயக்குநர்

2004ம் ஆண்டு வெளியாகி தெலுங்கில் ஹிட்டடித்த 'நுவ்வேஸ்தானந்தே நேவுதந்தன்தே' படத்தின் மூலம் இயக்குநராக பிரபுதேவா உருவெடுத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் தற்போது படங்களை இயக்கி வருகிறார். விஜய்க்கு ஹிட் கொடுத்த போக்கிரி, எங்கேயும் காதல் ஆகியவை இவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் தான்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவுடனான காதல் முறிவிற்குப் பின் இந்தி சென்ற பிரபுதேவா, தற்போது காந்தா படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பி வந்திருக்கிறார். தன்னுடைய 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், தற்போது படங்களையும் இவர் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபுதேவா!

English summary
Today Actor/ Dance Choreographer Prabhu Deva Celebrating His 43rd Birthday. From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous actor a wonderful birthday ahead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil