»   »  அரசியலுக்கு வருகிறார் நடிகர் பிரபு !

அரசியலுக்கு வருகிறார் நடிகர் பிரபு !

Subscribe to Oneindia Tamil
Prabhu with Roja

நடிகர் பிரபு விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாக அவரது அண்ணன் ராம்குமார் மீண்டும் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவாஜியை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் வேலூர் நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளர் பெருமாள்.

அவருக்கு மரியாதை செய்யும் விதமாக ஆண்டுதோறும் பொங்கல் நாளில் நடிகர் சிவாஜியும், அவரது மனைவி கமலாவும் பெருமாள் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கும் புத்தாடை, மற்றும் பழங்கள் கொடுப்பது வழக்கம்.

சிவாஜி மறைவுக்கு பிறகு அவரது மகன் ராம்குமார், நடிகர் பிரபு ஆகியோர் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த பொங்கல் நாளில் பெருமாள் வீட்டிற்கு வருகை தந்த ராம்குமார், பெருமாள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்பு அவரது குடும்பத்தினரிடம் புத்தாடைகள், பழங்களை கொடுத்து மகிழ்ந்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சந்திரமுகிக்குப் பின் சிவாஜி புரடக்க்ஷன் சார்பில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழியில் இரண்டு படங்கள் தயாரிக்கிறோம்.

இதில் கன்னடத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இப் படத்தை இயக்குனர் பி. வாசு இயக்குகிறார்.

தமிழில் அஜீத் ஹீரோவாக நடிக்கவுள்ளார். படத்திற்கு டைரக்டர் இன்னும் முடிவு செய்யவில்லை. இதன் படப்பிடிப்பு தீபாவளிக்கு தொடங்கி 2009 ஏப்ரல் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாகும்.

நடிகர் பிரபு அரசியலுக்கு வருவார். எப்போது எனத் தெரியாது. ஆனால் நான் உள்பட பலரும் அதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.

சில மாதங்களுக்கு முன்பும் ராம்குமார் இப்படிக் கூறியது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் ஜெயித்தாலும் அரசியலில் சிவாஜிக்கு தோல்வி தான் கிடைத்தது. பிரபுவுக்கு எப்படியோ

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil