»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மணிரத்னம் தயாரிக்க அழகம்பெருமாள் இயக்கும் படத்திற்கு "டும் டும் டும் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

தினா என்ற புதிய இசையமைப்பாளரை அறிமுகம் செய்யப் போவதாக சொல்லி வந்தார்கள். இவர் பல தொலைக்காட்சி தொடர்களுக்கு இசை அமைத்துவருபவர். குட்டித் திரையில் மிகப் பிரபலமானவர்.

ஷேக்ஸ்பியர் நாடகம்...இங்கிலாந்து என்று ரகுமான் பிஸியாகிப் போனதாலும் இளையராஜாவுடன் மோதல் காரணமாகவும் தினாவை இசை அமைக்கவைக்க மணி திட்டமிட்டிருந்தார்.

ஆனால் திடீரென மணிரத்னம் மனம் மாறிவிட்டார். இப்போது ராஜா குடும்பத்திடமே சரண்டர் ஆகியிருக்கிறார். இளையராஜாவின் மூத்த மகன்கார்த்திக் ராஜாவுக்கு இசையமைக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.

சமீபத்தில் திருமணமான கார்த்திக் ராஜாவுக்கு மனைவி வந்த யோகம், விஜயகாந்தின் வாஞ்சிநாதன் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது.இப்போது மணிரத்னத்துடன் பணியாற்ற வாய்ப்பு வந்துள்ளது.

மீண்டும் திரையை ஆக்கிரமிக்கிறார்கள் இளைய ராஜாக்கள்

ஆயிரம் பொய்களில் ஒன்று

பிரபுவை ஹீரோவாக வைத்து ஆயிரம் பொய் சொல்லி என்ற பெயரில் படம் தயாரிக்கத் தொடங்கிய இயக்குனர் சுபாஷ், தீடீரென்று அந்த படத்திற்குபெயரை பன்னீர் செல்வம் என்று மாற்றினார். பெயரை மாற்றியவர் ஹீரோவையும் மாற்றி விட்டார். இப்பொழுது பிரபுவுக்கு பதிலாக பிரபுதேவாநடிக்கிறார். இந்தப்படத்தில் தேவாவின் தம்பிகள், சபேஷ்-முரளி முதன் முறையாக இசையமைக்கிறார்கள்.

அது சரி, ஆயிரம் பொய்களில் இதுவும் ஒன்று.

கல்லானாலும் கணவன்

கவர்ச்சியின் மூலமாக பலரை கிளுகிளுப்பூட்டிக் கொண்டிருந்த நடிகை அனுராதாவின் கணவர் பைக் விபத்தில் சிக்கினார். தன் சுயநினைவைஇழந்தவராகவும் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஒழு குழந்தை மாதிரி குளிப்பாட்டி, உணவு ஊட்டி, உடை உடுத்தி, படுக்கவைத்து அவரை குழந்தை மாதிரியே பார்த்துக் கொள்கிறார்அனுராதா.

அனுராதா கல்லானாலும் கணவன் என்று வாழ்ந்து வருவது கண்டு திரையுலகமே பூரித்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கிறது. அனுராதாவின் மகள்அபிநயா திரையுலகிற்கு வருகிறார் என்பதில் சற்று சந்தோஷமாகவும் இருக்கிறாராம் அனுராதா?

ஒரு நடிகையின் தவம்

நடிகை ஷோபனா கடைசியாக ஒரு மலையாளப் படத்தில் நடித்து தேசீயவிருது பெற்றார். அதற்குப்பிறகு அவர் எங்கே போனார் என்ன ஆனார் என்பதுதெரியவில்லை.

அத்தை பத்மினியுடன் அமெரிக்கா போய் அங்கே நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்று ஒரு செய்தி அடிபட்டது. தனக்கு திருமணமே வேண்டாம், கன்னிப்பெண்ணாகவே வாழ்ந்து விடுகிறேன் என்று அமெரிக்காவில் பத்மினியுடன் தங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஏன் இந்த கன்னித்தவம்? - என்பது தான் அத்தை பத்மினி உட்பட யாருக்கும் புரியவில்லை.

Read more about: cinema, maniratnam, music, prabhu, shobana
Please Wait while comments are loading...