»   »  மோசர் பேயர்+பிரகாஷ் ராஜ்!

மோசர் பேயர்+பிரகாஷ் ராஜ்!

Subscribe to Oneindia Tamil


டிவிடி மற்றும் விசிடி தயாரிப்பு, விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் மோசர் பேயருடன், பிரகாஷ் ராஜ் கை கோர்க்கிறார். இரு நிறுவனங்களும் இணைந்து தமிழ் படத் தயாரிப்பில் குதிக்கவுள்ளன.


டிவிடி விற்பனையில் பெரும் புரட்சி படைத்து வரும் நிறுவனம் மோசர் பேயர். மிகக் குறைந்த விலைக்கு டிவிடிக்களை அது விற்று வருகிறது. இந்த நிலையில் மோசர் பேயர் நிறுவனமும், பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்ப் படங்களைத் தயாரிக்கவுள்ளது.

ஒரே நேரத்தில் மூன்று தமிழ்ப் படங்களை இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன. இவர்களுடன் மிர்ச்சி மூவிஸும் கை கோர்த்துள்ளது.

இதன் தொடக்க விழா நாளை சென்னை பார்க் ஹோட்டலில் நடைபெறுகிறது.

'வெள்ளித்திரை', 'அபியும் நானும்', 'மயிலு' என இந்தப் படங்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

ஒரே நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களின் படத் தொடக்க விழா ஒரே நாளில், ஒரே சமயத்தில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

'வெள்ளித்திரை'யில் பிரகாஷ் ராஜ், பிருத்விராஜ், கோபிகா ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத்தில் வெளியான உதயனு தாரம் படத்தின் ரீமேக் இது.

'அபியும் நானும்' படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. அவர்தான் படத்தின் முக்கிய கேரக்டரே.

'மயிலு' படத்தின் கலைஞர்கள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதில் 'வெள்ளித்திரை' மற்றும் 'அபியும் நானும்' ஆகிய இரு படங்களையும் பிரகாஷ் ராஜின் மனம் கவர்ந்த ஆஸ்தான இயக்குநரான ராதாமோகனே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசன்னாவுக்கு 'பிட்' ரோல் ஏதாவது உண்டா பிரகாஷ்ஜி?

Read more about: prakashraj
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil