»   »  மறுக்கும் பிரகாஷ் ராஜ்!

மறுக்கும் பிரகாஷ் ராஜ்!

Subscribe to Oneindia Tamil

பிரகாஷ் ராஜ் புதுமுடிவெடுத்துள்ளார். அதாகப்பட்டது, புதுமுக நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க மாட்டாராம்.

டூயட் மூலம் தமிழுக்கு வந்த பிரகாஷ் ராஜ் அந்தப் படத்திலிருந்து இன்று வரை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படு பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார். ரஜினி முதல் கமல் வரை, விஜய் முதல் விக்ரம் வரை அத்தனை பேருடனும் வில்லனாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக கலக்கி விட்ட பிரகாஷ் ராஜ், இப்போது தயாரிப்பாளராகவும் பிரமாதப்படுத்தி வருகிறார்.

இப்போது பிரகாஷ் ராஜ் தமிழிலும், தெலுங்கிலும் படு பிசியாக உள்ளார். கை நிறையப் படங்களுடன் இருக்கும் பிரகாஷ் ராஜ், தயாரிப்பிலும் வேகத்தை கூட்டியுள்ளார். மும்பையைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்துடன் கை கோர்ட்டு பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் நிறுவனம் ஏராளமான படங்களைத் தயாரிக்கப் போகிறதாம்.

இந்த நிலையில் ஒரு புது முடிவை எடுத்துள்ளார் பிரகாஷ் ராஜ். அதாவது புதுமுக ஹீரோக்களுக்கு வில்லனாக நடிப்பதில்லை என்பதுதான் அந்த முடிவு.

முன்ணனி ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பது, அதுவும் கூட தனது கேரக்டருக்கும் அதிக முக்கியத்துவம் இருப்பதாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாராம் பிரகாஷ் ராஜ்.

சமீபத்தில் கூட ஒரு புதுமுக நடிகர் அறிமுகமாகும் படத்தில் வில்லனாக நடிக்க பெரும் தொகையைப் பேசியுள்ளனர். ஆனால் பிரகாஷ் ராஜ் அதை நிராகரித்து விட்டாராம். இதனால் அப்செட் ஆகித் திரும்பினாராம் அந்த தயாரிப்பாளர். இத்தனைக்கும் அவர் முன்னணி தயாரிப்பாளராம்.

நீங்க புதுசுன்னு உங்களை டூயட் படத்தில் நடித்த பிரபு நிராகரித்திருந்தால்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil