For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  அழகிய தீயே படத்தின் வெற்றியால் அதைத் தயாரித்து நடித்த பிரகாஷ்ராஜ், அதில் நடித்த நவ்யா நாயர்உட்பட அந்தப் படத்தின் மொத்த டீமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது.

  தமிழில் கமலுக்கு அடுத்தபடியாக விருதுகளை அள்ளிக் குவிப்பவர் பிரகாஷ்ராஜ். விருது வாங்குவதில்மட்டுமல்லாது, சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்வதிலும் இவரும் கமல்மாதிரிதான். தனது டூயட் பிலிம்ஸ் சார்பில் அவ்வப்போது நல்ல படங்கள் தயாரித்து வருகிறார்.

  தனது நண்பன் ராதாமோகனுக்காக அவரை இயக்குனராக்கி பிரகாஷ்ராஜ் தயாரித்த அழகிய தீயே படம்இப்போது சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ஆட்டோகிராஃப் படத்திற்குப் பிறகு மனதை வருடும் மென்மையான கதை.ஆபாசபான பாடல்களோ, ரத்தக் களறியான சண்டைக் காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இன்றி படம்வந்ததால், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

  அனைத்து பத்திரிக்கைகளும் படத்தை தூக்கி வைத்து விமர்சனம் எழுதியுள்ளன. ரசிகர்கள் மட்டுமின்றிதிரையுலகின் பிரம்மாக்களும் ஆஹா ஓஹோவென்று படத்தை பாராட்டியுள்ளனர்.

  புது முகங்களை வைத்து தைரியமாக படம் எடுத்ததற்காகவே பிரகாஷ்ராஜைப் பாராட்ட வேண்டும் என்றுபாலச்சந்தர் கூறியதோடு, படத்திற்கு என்னை மார்க் போடச் சொன்னால், 100க்கு 150 மார்க் போடுவேன் என்றுகூறியிருக்கிறார்.

  இயக்குநர் சேரன் படத்தை பார்த்து நெகிழ்ந்து விட்டதாக கூறியதோடு, படத்திற்காக நான் என்ன செய்யவேண்டும்? பி.ஆர்.ஓ.வாக இருக்கட்டுமா என்று பிரகாஷ்ராஜிடம் கேட்டிருக்கிறார். மேலும் பாலுமகேந்திரா,பாலா, பாரதிராஜா உட்பட நடிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

  படத்தின் மூலம் கணிசமான லாபத்தைப் பார்த்து விட்ட பிரகாஷ்ராஜ், இப்போது திரையுலகினர் பாராட்டினால்மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளார். படத்தின் வெற்றி குறித்து அவர் கூறுகையில்,

  தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் குழப்பம் அடைவதில்லை. தெளிவான, நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்குஆதரவு அளிக்கின்றனர். குழப்பத்தில் இருப்பது சினிமா துறையினர் தான்.

  தயாரிப்பு துறையில் ரிஸ்க் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆரம்பத்தில் சொந்தப்படம் எடுக்கிறேன்என்றதும் பலரும் திட்டினர். எல்லோரையும் போல நீயும் மாட்டிக் கொண்டு கடனாளி ஆகிவிடுவாய் என்றுபயமுறுத்தினர். ஆனால், படத்தின் வெற்றிக்கு பிறகு பாராட்டுக்கள் குவிகிறது.

  இந்த வெற்றி கொடுத்த தைரியத்தில் தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன். ரசிகர்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள். அது கேவலமானது. எச்சில் பண்டத்தை சுவைப்பது போன்ற செயல்என்றார்.

  படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்யா நாயருக்கு சரத்குமாருக்கு ஜோடியாக அய்யா படத்தில் நடிக்க வாய்ப்புகிடைத்துள்ளது.

  இதற்கிடையே வருமா, வராதா என்ற சந்தேகத்தில் தொக்கிக் கொண்டிருக்கும் ரஜினியின் ஜக்குபாய் படத்தில்பிரகாஷ் ராஜ் நடிக்கவிருப்பதும் உறுதியாகியிருக்கிறது.

  ரஜினியின் மெகா பிளாப் படமான பாபாவில் பிரகாஷ்ராஜுக்கு ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டது.சந்தோஷமடைந்த பிரகாஷ் ராஜ், படப்பிடிப்பு நடந்த கேம்பகோலா மைதானத்திற்கு சென்றார். அவரை சிறிதுநேரம் காத்திருக்குமாறு கூறிய ரஜினியும், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும், நீண்ட நேரமாகியும் பிரகாஷ் ராஜைஅழைக்கவில்லை.

  வெறுத்துப் போன பிரகாஷ் ராஜுக்கு தன்மானம் உந்தித் தள்ள யாரிடமும் சொல்லாமல், விசுக்கென அங்கிருந்துகிளம்பிப் போய்விட்டார். இச் சம்பவத்துக்குப் பின் பிரகாஷ்ராஜை சமாதானப்படுத்தும் விதமாக ஜக்குபாய்படத்தில் முக்கிய ரோல் கொடுக்கத் திட்டமிட்டு அவரிடம் பேசினாராம் ரஜினி. உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம்பி.ராஜ்.

  கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ்ப் படங்களையும் கலைஞர்களையும் தனது சொந்த மாநிலத்திலும் மிகஉயர்வாகவே பேசுபவர் பிரகாஷ்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X