»   »  பெங்களூரில் கன்னட பிரசாத்

பெங்களூரில் கன்னட பிரசாத்

Subscribe to Oneindia Tamil

மும்பை மாடல் அழகி நேகாவை விபச்சாரத்தில் தள்ளிய வழக்கில் கன்னட பிரசாத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு சென்னை நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதையடுத்து அவரை போலீஸார் பெங்களூர் கொண்டு சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னியந்தியா முழுவதும் விபாச்சாரத் தொழிலில் கொடிக் கட்டிப் பறந்த கன்னட பிரசாத் போலீஸ் பிடியில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஒரே ஒரு நாள் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி நேகாவை விபாச்சாரத்தில் தள்ளியது தொடர்பான வழக்கில் பிரசாத்துக்காக 5 நாள் போலீஸ் காவலுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. 20ம் தேதி மாலை 5 மணிக்கு மறுபடியும் பிரசாத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்திரவிட்டார்.

இதையடுத்து நேற்று மாலை பிரசாத்தை தங்களது காவலில் எடுத்த போலீஸார் உடனடியாக அவரை பெங்களூர் அழைத்துச் சென்றார். பிரசாத்தின் பெங்களூர் தொடர்புகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

இதைத் தொடர்ந்து மும்பை, புதுச்சேரிக்கும் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil