»   »  கதறி அழுத மிஸஸ் பிரசாத்

கதறி அழுத மிஸஸ் பிரசாத்

Subscribe to Oneindia Tamil

தமிழக போலீஸார் நடத்திய விசாரணையின்போது கன்னட பிரசாத்தின் முதல் மனைவி லதா கதறி அழுதார்.

மாபெரும் மாமா பிரசாத்தை 5 நாள் காவலில் எடுத்த சென்னை போலீஸார் அவரை பெங்களூர், மைசூருக்குக் கொண்டு சென்று துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

பிரசாத்துடன் தொடர்புடைய பெண்கள், விபச்சார அழகிகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் அழைத்து விசாரித்தனர்.

அவரது வீட்டிலும் சோதனை போட்டு முக்கிய பிரமுகர்கள், அழகிகள், நடிகைகள் ஆகியோரின் முகவரிகள், தொைலபேசி எண்கள் கொண்ட டைரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த விசாரணையின்போது பிரசாத்தின் முதல் மனைவி லதா, 2வது மனைவி விமலா ஆகியோரையும் விசாரிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் விமலா போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி விட்டார்.

முதல் மனைவி லதாவை மட்டுமே போலீஸாரால் விசாரிக்க முடிந்தது. மைசூரில் வசிக்கும் லதாவை அங்கு சென்று வீட்டில் வைத்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையின்போது பிரசாத் குறித்த பல தகவல்களைத் தெரிவித்த லதா, ஒரு கட்டத்தில் குமுறிக் குமுறி அழுதுள்ளார். எனக்கு கணவர் என்று பெயர்தானே தவிர, பிரசாத்தால் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் எந்தப் பயனும் இல்லை.

என்னையும், எனது குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார் பிரசாத். நாங்கள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். ஆனால் அவர் ஆடம்பரமாக, சந்தோஷமாக இருந்து வந்தார் என்று கூறியுள்ளார் லதா.

இருப்பினும் லதாவின் வாக்குமூலத்தில் பிரசாத் லீலைகள் குறித்த முக்கியத் தகவல்கள் எதுவும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று மாலை சைதாப்பேட்ைட நீதிமன்றத்தில் பிரசாத் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos