»   »  கொண்டாடிய நடிகைகள் - மறுபடியும் பிரசாத்

கொண்டாடிய நடிகைகள் - மறுபடியும் பிரசாத்

Subscribe to Oneindia Tamil

மறுபடியும் மாமா பிரசாத் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 2 வாரங்களுக்குப் பிறகு பிரசாத் குறித்த பல புதுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த முறை முக்கியமான ஷா நடிகை குறித்து பல தகவல்களைக் கக்கியுள்ளாராம் பிரசாத். அதுதவிர பல நடிகைகள் குறித்த தகவல்களையும் காவல்துறை கசிய விட்டுள்ளது.

சமீபத்தில் பிரசாத்தை மீண்டும் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தபோது பல நடிகைகள் குறித்த தகவல்களைக் கக்கியுள்ளார் பிரசாத். அவர் சொன்ன தகவல்களும், நீலாங்கரையில் பிரசாத் வீட்டிலிருந்து பிடிபட்ட டைரியில் உள்ள தகவல்களும் ஒத்துப் போகின்றனவாம்.

பிரசாத்தின் டைரியில் முக்கியமான ஷா நடிகை குறித்த தகவல்கள் உள்ளதாம். இந்த ஷா நடிகைதான் பிரசாத்தின் பிசினஸுக்கு முக்கிய மூலதனமாக இருந்துள்ளார். இவரது கஸ்டமர்கள் பட்டியலையும் போலீஸாரிடம் ஒப்புவித்துள்ளார் பிரசாத்.

முக்கியமான ஒரு அரசியல் தலைவரின் பேரன் ஷா நடிகையின் நிரந்தர வாடிக்கையாளராம். அதேபோல முதல்வர் கருணாநிதிைய நள்ளிரவில் வீடு தேடிப் போய் கைது ெசய்த விவகாரத்தில் இடம் பெற்றிருந்த ஒரு உயர் காவல் அதிகாரியும் இந்த நடிகையின் கஸ்டமராம்.

அதேபோல, டிவிகளில் சவுண்டாக விளம்பரம் செய்து பிசினஸைப் பிடித்த தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள அந்த பிரமாண்டக் கடையின் அதிபர்களும், வாரிசுகளும் கூட ஷாவின் கஸ்டமர்கள்தானாம். அதேபோல சென்னை நகரைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவும் கூட நடிகையிடம் நெருங்கிய நட்பு கொண்டவர்தானாம்.

சில அதிமுக புள்ளிகளும் கூட நடிகையுடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ளார்களாம். அந்தப் புள்ளிகள் குறித்த தகவல்களை முக்கியத்துவம் கொடுத்து தனித் தனியாக விசாரித்து வருகிறாம் காவல்துறை.

ஷா நடிகை குறித்து கன்னட பிரசாத்திடமிருந்து விலாவரியாக தகவல்கள் கிடைத்துள்ளால் அந்த நடிகையிடமும், அவரது நிழல் போல கூடவே இருக்கும் அழகிய அம்மாவிடமும் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாம்.

ஏற்கனவே நடிகைக்கு போலீஸ் தரப்பிலிருந்து சம்மன் போயுள்ளதாம். போலீஸார் வேகம் பிடிப்பதை உணர்ந்த நடிகை, அரசியல் பெரும் தலைவர் ஒருவரை அணுகி அபயம் கோரியுள்ளாராம். அவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளாராம்.

அந்தத் தலைவரின் மகனையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பிரச்சினையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தால், நீங்கள் தயாரிக்கும் படத்துக்கு (அவர் முதல் முறையாக தயாரிப்புத் துறையில் உதயமாகிறார்) வரைமுறையே இல்லாமல் கால்ஷீட் தருகிறேன் என்று கூறி சரணாகதி அடைந்துள்ளாரம்.

ஷா நடிகை விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. ஷாவோடு நிற்காது இது, வரிசையாக பல மீன்கள் இதில் சிக்கப் போகிறது என்கிறு போலீஸ் வட்டாரம்.

இதேபோல கஸ்தூரி மான் நடிகையும் கூட கன்னட பிரசாத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளாராம். மலையாள மானான இவர் இப்போது தமிழ்த் திருமகளாகவும் நடித்துக் கலக்கி வருகிறார்.

இந்த நடிகையை 2 ஆண்டுகளுக்கு முன்பு நமது தலைமைச் செயலகம் அைமந்துள்ள கோட்டையின் முதலில் வரும் பெயருடைய அந்த இணை ஆைணயரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் பிரசாத். அதன் பிறகு கோட்டையும், மானும், அப்பா, அம்மா ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விளையாட்டு படு சீரியஸாகப் ேபாய்க் கொண்டிருந்ததாம், பிரசாத் பிடிபடும் வரை.

இவரைப் போலவே நீலாம்பரி நடிகையும் கூட பிரசாத்துடன் படு நெருக்கமாக இருந்தவராம். ஒரு முக்கியமான அரசியல் தலைவர், தனது எதிரிகளை சமாளிக்க நீலாம்பரியை விட்டுத்தான் காரியத்தை முடிப்பாராம். தற்போதும் கூட அந்தத் தலைவர் ஆட்சி, அதிகாரத்துடன்தான் இருக்கிறாராம்.

இதை விட சூப்பர் மேட்டர் என்னவென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பல நிதி நிறுவனங்கள் மக்களிடம் வசூலித்த பணத்தை ஸ்வாஹா செய்து திவாலாகிப் போயின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிறுவனங்கள் திவாலாகிப் போனதற்கு முக்கியக் காரணமே, நிதி நிறுவன அதிபர்கள், நடிகைகளுக்கு பணத்தை அள்ளித் தந்து அவர்களை கிள்ளிக் கொண்டதுதான். அனுபவ் நிறுவனத்தின் தலைவர் 1996ம் ஆண்டு மீன் நடிகைக்கு ரூ. 85 லட்சம் மதிப்புள்ள கேரவன் வாகனத்ைத வாங்கிக் கொடுத்து வாசம் பார்த்து விட்டுப் போனாராம்.

அதேபோல, கார் வாங்கணுமா எங்கிட்ட வாங்க என்று கூவிக் கூவி விளம்பரப்படுத்தி மக்களை மொட்டை அடித்த ரமேஷ் கார்ஸ் நிறுவனத்தின் அதிபர் அதே நடிகைக்கு 300 பவுன் நகையைப் போட்டு ஜொலிக்க வைத்து சிலுசிலுத்துள்ளாராம்

இவை எல்லாவற்றுக்குமே பிரசாத் தான் மாமா வேலை பார்த்து காரியங்களை கச்சிதமாக முடித்துக் கொடுத்தாராம்.

இப்படிப் பல திடுக்கிடும் தகவல்களை காவல்துறை வாய் மூலமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றை அதிகாரப்பூர்வமாக சொல்ல மறுக்கிறார்கள். இவற்ைற சம்பந்தப்பட்டவர்கள் மறுக்க முடியாது, காரணம் அத்தனை மசாலா மிக்ஸ் விவகாரங்களுக்கும் போலீஸாரிடம் பக்கவாக ஆதாரங்கள் உள்ளதாம்.

இன்னும் எத்தனை நாளுக்கோ இந்த இழுபறி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil