»   »  வரதட்சணை சட்டத்தை தவறாகபயன்படுத்தும் பெண்கள்-பிரஷாந்த் தாக்கு!

வரதட்சணை சட்டத்தை தவறாகபயன்படுத்தும் பெண்கள்-பிரஷாந்த் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

வரதட்சணைக் கொடுமை சட்டத்தை சில பெண்கள், தங்களின் தவறுகளை மறைக்கும் ஆயுதமாக தவறாகப் பயன்படுத்துவதால் பல தாய்மார்கள், சகோதரிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கிரகலட்சுமி விவகாரத்தை சுட்டிக் காட்டி நடிகர் பிரஷாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் சேவ் இந்தியன் பேமிலி என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்டு பிரஷாந்த் பேசினார். கிரகலட்சுமி விவகாரம் தொடர்பாக கடும் மனச் சிக்கலில் இருந்த பிரஷாந்த் நேற்றைய கருத்தரங்கில் லேசான மனதுடன் காணப்பட்டார்.

கிரகலட்சுமியின் நடவடிக்கை குறித்தும் விரிவாகப் பேசினார். பிரஷாந்த் பேசுகையில், கிரகலட்சுமி என்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக இருந்தால் ஏன் என் மீது வரதட்சணைக் கொடுமை செய்ததாக வழக்குப் போட வேண்டும். அவர் போட்ட வழக்கு எங்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வரதட்சணைக் கொடுமை சட்டம் என்பது பெண்களைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். ஆனால் சில பெண்கள், தாங்கள் செய்த தவறுகளை மறைக்க இந்த சட்டத்தை ஆயுதம் போல பயன்படுத்துவதால் எத்தனையோ தாய்மார்கள், சகோதரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ஆண்களைப் பழிவாங்க நினைக்கும் பெண்களின் செயலில் நியாயம் இல்லை. எனவே இந்த சட்டத்தில் ஆண்கள் பக்கம் உள்ள நியாயத்தைக் காக்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

எங்களை சேர்த்து வைக்க எனது நண்பர்கள், உறவினர்கள் கடுமையாக முயன்றனர். ஆனால் அவற்றையெல்லாம் கிரகலட்சுமி உதாசீனப்படுத்த விட்டார். அவரை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றார் பிரஷாந்த்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil