»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தனது மகள் சரண்யாவை எப்படியாவது ஹீரோயினாக்கிவிடும் முடிவில் தீவிரமாக இருக்கும் மாஜி டபுள் மீனிங்டைரக்டர் பாக்யராஜ், அதற்காக பிரஷாந்தின் உதவியை நாடியுள்ளார். பிரசாந்தை ஹீரோவாக்கி, மகளைஅவருக்கு ஜோடியாக்க இருக்கிறார்.

நேற்று வந்தவர்கள் எல்லாம் கோலிவுட்டில் முன்னுக்கு வந்துவிட 10 வருடமாக பீல்டில் இருக்கும் தன் மகன்பிரசாந்த்தால் ஒரு லெவலுக்கு மேல் வர முடியவில்லையே என்று தியாகராஜனுக்கு ஏக வருத்தம். பிரசாந்தைஎப்படியாவது முன்னுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஆசையில் ஜெய் படத்தை எடுத்தார். அதுபிளாப்.

முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அடுத்து ஷாக் படத்தை எடுத்து வெளியிட்டார். படம் சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது.

இடையே திடீரென்று ஷாக் படத்தைப் பற்றி ஒரு பரபரப்பு கிளம்பியது. படத்தைப் பார்த்து இரண்டு பேருக்குஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாம். சென்னை சங்கம் தியேட்டரில் ஒருவருக்கும், பாண்டிச்சேரி ருக்மணிதியேட்டரில் ஒருவருக்கும் படத்தில் வரும் திகில் காட்சிகளால் நெஞ்சடைத்து விட்டதாம். பின்பு அக்கம் பக்கம்இருந்தவர்கள் தியேட்டருக்குக் கொண்டு போனார்களாம்.

ஆனால், இந்த இரண்டு பேருமே தியாகராஜன் ஏற்பாடு செய்த செட்-அப் ஆட்கள் என்றும் பேச்சும் அடிபடுகிறது.படத்தை பூஸ்ட் செய்யும் நோக்கில் அவர்தான் இந்தப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

எது எப்படியோ ஷாக் படம் பிரசாந்த்துக்கு அதிரடியாக 5 படங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

ஸ்னேகாவுடன் ஜோடி சேர்ந்து ஆயுதம் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த். இது ஷாக் படம் முடிந்ததும்ஒப்புக் கொண்ட படமாகும்.

இதற்கிடையே தனது மகள் சரண்யாவைக் கதாநாயகியாக்க முடிவெடுத்த பாக்யராஜ், பாரிஜாதம் என்றுபடத்துக்கு பெயரும் சூட்டிவிட்டு ஹீரோவாக யாரைப் போடுவது என்று தடுமாறிக் கொண்டிருந்தார். மற்றமுன்னணி ஹீரோக்கள் எல்லாம் ரூ. 1, ரூ. 2 , ரூ. 3 கோடி என்று பல விரல்களை நீட்டி சம்பளம் கேட்டு மிரட்ட,இருப்பதிலேயே குறைந்த சம்பளத்தில் நடிக்கும் இளம் ஹீரோவான பிரஷாந்தைப் பார்த்துப் பேசி புக்செய்துவிட்டார்.

விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

பிஸியாகிவிட்ட பிரஷாந்த்:


இது தவிர ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு படத்திலும் பிரசாந்த் நடிக்கவுள்ளார்.ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு நாவல் ஆசிரியர்களான சுபா கதை எழுதுகின்றனர். இந்தப் படத்தில்பிரசாந்த் உடன் ஸ்ரீகாந்த்தும் நடிக்கிறார்.

இலங்கைத் தமிழர் கலாதாஸ், அடைக்கலம் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார். இதில் பிரசாந்த்தான் ஹீரோ.

அதேபோல் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நீனு நானு படத்தின் தமிழ் பதிப்பிலும், முழுக்க முழுக்க லண்டனில்படமாகும் ஜாக்கி என்ற இன்னொரு படத்திலும் பிரசாந்த்தான் ஹீரோ.

எப்படியோ முன்னுக்கு வந்தா சரிதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil