»   »  புலன் விசாரணை-2 ரெடி

புலன் விசாரணை-2 ரெடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Prasanth
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவாகியுள்ள புலன் விசாரணை படத்தின் 2ம் பாகம் முடிந்து விட்டது. பொங்கலுக்குத் திரைக்கு வரத் தயாராகி விட்டது. இப்படத்தை பிரஷாந்த் பெரிதும் நம்பியுள்ளாராம்.

விஜயகாந்த் நாயனாக நடிக்க, அவரது ஆத்ம நண்பராக விளங்கிய இப்ராகிம் ராவுத்தர் தயாரிக்க, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற படம் புலன் விசாரணை. இப்படத்தின் 2ம் பாகத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியுள்ளார்.

பிரஷாந்த் நாயகனாக நடிக்க, மலையாள நடிகை கார்த்திகா, அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர். அதீம் கான் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகியுள்ளார்.

கார்த்திகாவுக்கு இதுதான் முதல் படம். ஆனால் இப்படம் வருவதற்கு முன்பாகவே சரத்குமாருடன், நம் நாடு படத்தில் நடித்து விட்டார் அவர். அப்படமும் ஏற்கனவே ரிலீஸாகி ஒரு ஓட்டம் ஓடி ஓய்ந்து விட்டது.

விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை, ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை. பிரஷாந்த் நடித்துள்ள படத்தின் கதை, தீவிரவாதம் குறித்தது.

வில்லன் நடிகராக மும்பை புதுமுகம் ஒருவர் இப்படத்தில் தலை காட்டியுள்ளார்.

இப்படத்தை தனது கம் பேக் படமாக கருதுகிறார் பிரஷாந்த். கிரகலட்சுமி விவகாரத்தல் வெதும்பிக் கிடக்கும் தனது மார்க்கெட், இப்படத்தால் நிமிரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

இப்படம் குறித்து அவர் கூறுகையில், 2008ம் ஆண்டு எனக்கு நல்ல ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த ஆண்டு நான், நான்கு படங்களில் நடித்தேன். ஆனால் எதுவுமே வெளியாகவில்லை.

ஆனால் இந்த ஆண்டில் அவை அனைத்தும் ரிலிஸாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

புலன் விசாரணை -2 எனக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தருக்கும் பிரேக் கொடுக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil