»   »  டாக்சி டிரைவர் வருமா?!

டாக்சி டிரைவர் வருமா?!

Subscribe to Oneindia Tamil

ரீமா சென்- பிரஷாந்த்- நமீதா நடிக்க இருந்த "டாக்சி டிரைவர் படத்தின் இயக்குனர் மார்கன் அந்தோணி, ரூ. 5 லட்சம் மோசடி செய்தவழக்கில் தலைமறைவாகி விட்டார். முன் ஜாமீன் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இயக்குனர் கெளதமின் "காக்க காக்க படத்தில் அவருடைய உதவியாளராக இருந்தவர் மார்கன் அந்தோணி. பிரஷாந்தை வைத்து ஜீன்ஸ்,ஜோடி, காதல் கவிதை, ஆயுதம் ஆகிய படங்களை தயாரித்த டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில், டாக்ஸி டிரைவர் என்ற படத்தை மார்கன்இயக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

டாக்சியில் பயணம் செய்யும் பலதரப்பட்ட பயணிகள், டிரைவர்களுக்கு ஏற்படும் சோதனைகள், காதல், சண்டை, சச்சரவுகள் ஆகியஅனைத்தையும் பின்னணியாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட இருந்தது.

இந்தப் படத்தில் பிரஷாந்துக்கு 2 நாயகிகள். ஒருவர் ரீமா சென். இன்னொருவர் நமிதா. வழக்கம் போல பிரஷாந்தின் உயிர் நண்பனாகதுபாய் பாபு என்ற கேரக்டரில் விவேக் நடிக்கிறார்.

இதில் வில்லனாக ஆனந்த் தியேட்டர் கருணாகரன் அறிமுகமாகிறார். இவரது தந்தை தான் அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாக நடித்தார்.

இவர்களுடன் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன், கலாபவன் மணி, விஜயகுமார், ஆனந்த் ராஜ், கேப்டன் ராஜ், நிழல்கள் ரவி, சார்லி,தாமு, ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீவித்யா, சத்யப்ரியா, சங்கீதா என ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமே இந்தப் படத்தில் நடிக்க புக்செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியின் மகன் ஜீ.வி.பிரசாத் இசையமைப்பாளராக இதில் அறிமுகமாக உள்ளார். ஜென்டில்மேன்படத்தில் "சிக்கு புக்கு ரெயிலே பாடலை மழலைக் குரலில் பாடியவர் தான் இவர். 17 வயதிலேயே இவர் இசையமைப்பாளராகஅறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தனது டாக்ஸியில் பயணம் செய்த ஒரு பெண்ணைத் தேடி பிரஷாந்த் துபாய் செல்கிறார். அங்கு ஒரு கொலைகாரக்கும்பலிடம் சிக்கும் பிரஷாந்த் எப்படி மீண்டு இந்தியா திரும்புகிறார் என்பதை மிகவும் பரபரப்பாக சொல்லப் போகிறார்களாம்.

மே மாதம் படப்பிடிப்பு தொடங்கி துபாய், ஹாலந்து, லண்டன் என கண்ணுக்கு குளிர்ச்சியான பகுதிகளில் படமாக்கத் திட்டமிட்டிருந்தனர்.

இதுதொடர்பான அறிவிப்பு நேற்று தான் வெளியானது. இந் நிலையில் தான் பண மோசடி வழக்கில் சிக்கி டைரக்டர் மார்கன்தலைமறைவாகியுள்ளார்.

மார்கனின் தந்தை பீலிக்ஸ் அந்தோணி வெளிநாட்டு வேலைக்கு சிலரை அனுப்பியிருக்கிறார். இவரிடம் திருவொற்றியூரைச் சேர்ந்த சுசீலாஎன்ற பெண், வெளிநாட்டு வேலைக்கு தன்னை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு ரூ. 5 லட்சம் தந்தால் உடனடியாக லண்டனுக்கு அனுப்பி வைப்பதாக பீலிக்ஸ் கூறியுள்ளார். இதையடுத்து அங்குமிங்கும் பணத்தைப்புரட்டிய சுசீலா பணத்தைக் கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்ற பீலிக்ஸ் வேலை எதையும் வாங்கித் தரவில்லை, லண்டனுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பும் தெரியவில்லை.இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுசீலா, மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடம் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க ஆணையர் நடராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து பீலிக்ஸ்அந்தோணியைக் கைது செய்தனர். அவடரிம் நடத்திய விசாரணையில், மார்கனுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மார்கன் தலைமறைவாகி விட்டார். அவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜாமீன் கிடைக்காவிட்டால் மார்கன் கைதாக வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சூழல் வந்தால் ஜாமீனில் வெளியில் வந்தால் தான் அவரால்இந்தப் படத்தை இயக்க முடியும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil