»   »  ப்ரீத்தியின் புதிய படங்கள்

ப்ரீத்தியின் புதிய படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதலனிடம் அந்நியோன்யமாக ப்ரீத்தி வர்மா இருப்பது போன்ற புகைப்படங்கள் போலீஸ் கையில் சிக்கயுள்ளது.

கிளாமர் ரோல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ப்ரீத்தி வர்மா, கடந்த மாதம் 11ம் தேதி ராஜமுந்திரியில் தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது திடீரென காணமால் போய் விட்டார்.

அவர் காணாமல் போணது முதல் பல்வேறு குழப்பங்கள், சர்ச்சைகள், பரபரப்புகள் ஏற்பட்டு விட்டன. இந்த வழக்கை கே.கே.நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு மருத்துமனையில் ப்ரீத்தி வர்மா, மன நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதை போலீஸார் மறுத்து விட்டனர்.

விரைவில் ப்ரீத்தி கண்டிபிடிக்கப்படுவார் என்று மட்டுமே சொல்லி வரும் போலீஸார் அது குறித்து மேற்கொண்டு எந்தத் தகவலையும் தர மறுக்கிறார்கள். இந்த நிலையில் ப்ரீத்தி வர்மா தனது வழக்கறிஞர் மூலம் ஒரு கடிதத்தை போலீஸாருக்கு அனுப்பியுள்ளார்.

அதில், ப்ரீத்தியின் படம் உள்ளது. அக்கடிதத்தில் தான் மும்பையில் நலமுடன் இருப்பதாகவும், என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ப்ரீத்தி.

இந்த நிலையில் மேலும் சில புகைப்படங்கள் போலீஸாருக்கு சிக்கியுள்ளது. அந்தப் படத்தில் ப்ரீத்தியின் காதலரும் உள்ளார். ப்ரீத்தியும், அவரும் படு நெருக்கமா, படு அந்நியோன்யமாக உள்ளார் ப்ரீத்தி. இந்தப் படங்களையும் ப்ரீத்தியே அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ப்ரீத்தியை தனது மடியில் கிடத்திக் கொண்டு ஜஸ் க்ரீம் ஊட்டுவது போலவும், இன்னும் சில காரியங்களை செய்வது போலவும் அந்தப் படத்தில் ப்ரீத்தியும், அவரது காதலரும் உள்ளனர்.

மேலும் ராஜமுந்திரியில் ப்ரீத்தி படப்பிடிப்பில் இருந்தபோதும் இந்த நபர் அங்கு வந்து ப்ரீத்தியிடம் பலமுறை பேசியுள்ளாராம். இதைப் படப்பிடிப்பில் உள்ளவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். தாய்மாமா என்று சொல்லிக் கொண்டு வருவாராம் அந்த மர்ம நபர்.

போலீஸாரின் சந்தேக வலைக்குள் இந்த நபரும் இருப்பதால் அவரைப் பிடித்து விசாரிக்க போலிஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil