»   »  மும்பை நீதிமன்றத்தில் ப்ரீத்தி வர்மா சரண்! -காதலனுடன் திருமணம் ஓவர்

மும்பை நீதிமன்றத்தில் ப்ரீத்தி வர்மா சரண்! -காதலனுடன் திருமணம் ஓவர்

Subscribe to Oneindia Tamil

காணாமல் போன நடிகை ப்ரீத்தி வர்மா இன்று மும்பை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரது காதலருடன் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக ப்ரீத்தியின் வழக்கறிஞர் சோப்ரா தெரவித்துள்ளார்.

கடந்த மாதம் 11ம் தேதி ஆந்திராவில் படப்பிடிப்பிலிருந்து திடீரென காணாமல் போனார் ப்ரீத்தா. அவரது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

இதற்கிடையில் ப்ரீத்தி வர்மா போலீஸாருக்கு கடிதம் அனுப்பினார். அதில் ,பெற்றோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியதால் நான் காதலனுடன் ெசல்கிறேன், தேட வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தது.

ப்ரீத்தியின் காதலன் என சந்தேகத்துக்கு உள்ளான விஜய், மகேந்திரன், விந்தியாவின் மேனேஜர் அருண் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் ப்ரீத்தி வர்மா கடத்தப்பட்டிருக்கலாம், போதை கும்பலிடம் சிக்கியிருக்கலாம் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ப்ரீத்தி மும்பையில் இருப்பது தெரிய வந்தது. சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அைத ப்ரீத்தி வர்மா ஏற்கவில்லை.

இந் நிலையில் இன்று அவர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். சில நாட்களில் அவர் சென்னை திரும்பலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் இந்தி படங்களில் நடிக்க முயற்சிப்பதாக தெரிகிறது.

இந் நிலையில ப்ரீத்தி வர்மாவின் பெற்றோருக்கு வந்த ப்ரீத்தியின் ஆபாச படங்கள் குறித்து போலீஸார் தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil