»   »  இப்ப காமெடி - அப்புறம் அதிரடி!

இப்ப காமெடி - அப்புறம் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

கங்கை அமரனின் முதல் புதல்வன் பிரேம்ஜி படு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் - காமெடி நடிகராக.

சந்திரமுகியில், பிரபு பேசிய என்ன கொடுமை சரவணன் இது என்ற வசனம், இந்த அளவுக்கு பிரபலமாகும் என யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். முதலில் ரஜினியின் லகலகலக ஃபேமஸ் ஆனது. ஆனால் இப்போது யாரைப் பார்த்தாலும், எங்கே பார்த்தாலும் ஒரே கொடுமை சரவணன்!

இந்த வசனத்தை இந்த அளவுக்கு பாப்புலராக்கியவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பல அவதாரம் எடுத்துவரான கங்கை அமரனின் மூத்த புதல்வர்தான் பிரேம்ஜி.

தம்பி வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தில் காமெடியில் கலக்கியிருந்த பிரேம்ஜி இப்படத்தில் பேசிய என்ன கொடுமை சார் இது என்ற வசனம் படு பாப்புலராகி விட்டது. இதில் என்ன காமெடி என்றால் ரஜினி படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம், இன்னொரு படம் மூலம் பிரபமலானதுதான்.

மேட்டர் என்னவென்றால், பிரேம்ஜியைத் தேடி இப்போது பல பட வாய்ப்புகள் வருகிறதாம். எல்லாமே காமெடி டிராக்தான். ஹீரோவுக்கு தோழர் வேடம்தான் முக்கால்வாசியாம். பிரேம்ஜியும் எல்லாவற்றையும் ஜாலியாக ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறாராம்.

சிம்புவுடன் கெட்டவன், விஷாலுடன் சத்யம் என காமெடியில் பிசியாக இருக்கிறார் பிரேம்ஜி.

நடிகராக கலக்கிக் கொண்டிருந்தாலும் பிரேம்ஜியின் முக்கியமான நோக்கமே, பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதானாம். பெரியப்பா அளவுக்கு முடியாவிட்டாலும் கூட தம்பி யுவன் அளவுக்காவது மாறி பின்னி எடுக்கணும் என்ற ஆசையில் உள்ளாராம்.

பிரேம்ஜிக்கு அதிரடியான இசைதான் பிடிக்குமாம். எப்போது பார்த்தாலும் எதையாவது தட்டிக் கொண்டுதான் இருப்பாராம். யுவன் இசையில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருப்பது பிரேம்ஜிக்கு ரொம்பப் பெருமையாம்.

நானும் ஒரு காலத்தில் பெரிய மியூசிக் டைரக்டராவேன் என்று சகாக்களிடம் இசை தாகத்தோடு கூறிக் கொண்டிருக்கிறாராம்.

ரொம்ப நல்லது சரவணன்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil